காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் | செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்" | விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” | ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் |

ஜூலை மாதத்தின் எஞ்சியுள்ள இரண்டு வாரங்களில் சில படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்த 'சத்தியவான் சாவித்திரி' படம் ஜூலை 24 அன்றும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கியுள்ள 'சிக்மா' படம் ஜூலை 31 அன்றும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜூலை 23ல் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வெளியாகும் என திடீரென அறிவித்தார்கள். இதனால், சில படங்களின் வெளியீடுகளை ஏற்கெனவே மாற்றி அறிவித்துள்ளார்கள்.
நேற்று வெளியாக வேண்டிய 'அர்ஜூனன் பேர் பத்து, டார்க் ஹெவன்' ஆகிய படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'இம்மார்டல்' படம் ஜூலை 23ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தைத் தற்போது செப்டம்பர் 4ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.
ஜூலை 24ல் அறிவிக்கப்பட்டிருந்த 'சத்தியவான் சாவித்திரி' படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று கூட தயாரிப்பு நிறுவனம் படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் புது போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனத் தெரிகிறது.
ஜூலை 31ல் அறிவிக்கப்பட்டிருந்த 'சிக்மா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சமீபமாக எந்தவித அப்டேட்டையும் தரவில்லை. அப்படி அந்தப் படம் வருவதாக இருந்தால் இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வந்தாக வேண்டும்.
அடுத்த வெளியீடுகளில் ஜூலை 23ல் 'ஜனநாயகன், ஜூலை 24ல் 'சத்தியவான் சாவித்திரி', ஆகஸ்ட் 7ல் 'ஜிடிஎன்', ஆகஸ்ட் 14ல் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', ஆகஸ்ட் 28ல் 'கராத்தே பாபு', செப்டம்பர் 4ல் 'இம்மார்டல், மண்டாடி', செப்டம்பர் 10ல் 'சர்தார் 2', செப்டம்பர் 11ல் 'டிமாண்டி காலனி 3', அக்டோபர் 1ல் ‛மிஸ்டர் பாரத்', அக்டோபர் 15ல் ‛ஜெயிலர் 2' ஆகிய படங்கள் உறுதியாக வர உள்ளன.




