Advertisement

சிறப்புச்செய்திகள்

'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால் | மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ | உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி? | தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா | பிளாஷ்பேக்: காணாமல் போன சிவாஜி படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா?

10 செப், 2026 - 01:51 IST
எழுத்தின் அளவு:
Bhatta-Movie...-Daughters-Song-Release-Is-Appamagal-Pasham-Katha
Advertisement

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் பத்தா. இயக்குனர் அட்லி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான மகளே...வை சாய் அபயங்கர் இசையமைத்து, பாடியுள்ளார், கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். 'மகளே' பாடல் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியில் உருவாகி உள்ளது.

குறிப்பாக 80-களின் இசை உலகை இந்த பாடல் கொண்டு வந்துள்ளது. 'மகளே' பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.

ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேத்தாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்துள்ளது. இதனால் பத்தா படம் அப்பா, மகள் பாசத்தை.அடிப்படையாக கொண்ட கதை என தெரிகிறது. அக்டோபர் 1ல் படம் ரிலீஸாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய்'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் ... விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap