எதிர்காலத்தில் நடக்க போவதை அப்பவே கணித்து சொன்ன சினிமாக்கள் | தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளையே தேடுகிறேன் : ஷ்ரேயாஸ் தல்படே | 'பகவந்த் கேசரி'யின் இன்ஸ்பிரேஷன் மட்டும்தான் 'ஜனநாயகன்' | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே உணவுப் பற்றாக்குறை பற்றிய சீர்திருத்த சினிமாப் பாடல் | 2026 தேர்தலில் வேட்பாளர்களை கண்டறிய பணம் வாங்கினேனா? : ஸ்வேதா மேனன் பதில் | சிவகார்த்திகேயன் போல சித்தார்த்திற்கும் பெயர் கிடைக்குமா ? | 'லெனின்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்? | 'ராமாயணா'வில் ஜடாயுவுக்காக குரல் கொடுப்பது அமிதாப் அல்ல.. அனுபம் கெர் | ரொம்ப ஹெவியா இருக்கு ; வினோத்தின் கதையை மாற்றிய விஜய் | தனது அனுபவங்களை படமாக இயக்கும் அரசு அதிகாரி |

மார்வெல் ஸ்டூடியோ நிறுவனம் இனி அவெஞ்சர்ஸ் கதைகள் வேண்டாம் என்று முடிவெடுத்து கடைசியாக 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தை வெளியிட்டு அவென்ஞ்சர்களுக்கு விடை கொடுத்தது. என்றாலும் வசூல் ஆசை யாரை விட்டது. உலகெங்கும் உள்ள விநியோகஸ்தர்கள் அவென்ஞ்சர்ஸை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று வற்புறுத்த மார்வெல் ஸ்டூடியோ தனது முடிவை கைவிட்டு மீண்டும் அவென்ஞ்சர்களுக்கு உயிர் கொடுத்துள்ளது. 'அவென்ஞ்சர்ஸ: டூம்ஸ்டே' என்ற படத்தை மீண்டும் கொண்டு வருகிறது.
இதனால் பல அதிரடியான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. எண்ட் கேமில் அயர்மேனை சாகடித்தபோது உலகமே அழுதது. ஆனால் இந்த படத்தில் அயர்ன்மேன் (ராபர்ட் டவுனி) இதில் கொடூர வில்லனாக வருகிறார். அதேபோன்று கேப்டன் அமெரிக்கா (கிறிஸ் எவான்ஸ்) திரும்பி வருகிறார். அவர்தான் வில்லன் அயர்ன்மேனை நேரடியாக களத்தில் சந்திக்கும் ஹீரோ. அவருடன் இணைந்து போராடுகிறார் தோர். இதுதவிர, 'எக்ஸ்-மென்' கதாபாத்திரங்களான ப்ரொபெசர் எக்ஸ், மேக்னடோ, சைக்ளோப்ஸ் மற்றும் கேம்பிட் ஆகியோரும் அவெஞ்சர்ஸ் அணியுடன் இணைகிறார்கள். இவர்களுடன் அண்மையில் அறிமுகமான 'பென்டாஸ்டிக் போர்' மற்றும் 'தண்டர்போல்ட்ஸ்' குழுவினரும் இணைந்துள்ளனர்.
மல்டிவெர்ஸை அழிக்க அயர்ன்மேன் தலைமையில் வரும் புதிய எதிரிகளை சூப்பர் மேன்கள் எதிர்த்து போராடுவதுதான் கதை. இந்த முறை எதிரிகளும் சூப்பர் மேன்களாக இருப்பதால் ஆட்டம் அதிரடியாக இருக்கப்போகிறது. 'எண்ட்கேம்' படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கி உள்ளனர். டிசம்பர் 18 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




