Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் | மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா | "இனியாவது திருமணம் செய்வீர்களா ?" - 51 வயது பாலிவுட் நாயகி சொன்ன பதில் | ஏழு வருடத்திற்கு பிறகு 'கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம் | விழா மேடையில் ரவீனா டாண்டனை நாய் கடிக்க முயன்றதால் பரபரப்பு | மோகன்லாலின் மகள் அறிமுகப் படம் ரிலீஸ்: மம்முட்டி வாழ்த்து | காவி உடை சர்ச்சையில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர் | ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள் | வாரணாசி படத்திலிருந்து மேலும் ஒரு வீடியோ கசிவு | ராமாயணா படம் சர்வதேச அளவில் 50,000 திரையரங்குகளில் ரிலீஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராக்கா படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலா?

06 ஆக, 2026 - 05:03 IST
எழுத்தின் அளவு:
Shah-Rukh-Khan-to-make-a-guest-appearance-in-Rakka
Advertisement

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‛ராக்கா' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இரு பாகங்களாக தயாரிக்க திட்டமிட்டு வருகிறார்கள். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இருப்பினும் சமீபத்திய அறிக்கைகளின்படி இந்தத் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லிக்கும், ஷாருக்கானுக்கும் இடையே உள்ள நெருங்கிய நட்பு காரணமாகவே இந்த செய்தி தீயாகப் பரவியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஒரு மீண்டும் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனே பங்கு பெறும் ஒரு முக்கியக் காட்சி படமாக்கப்பட உள்ளதுடன், தீபிகாவின் பெரும்பாலான படப்பிடிப்பு பகுதிகள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகப் கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ராமாயணா' இரண்டாம் பாகம் 50 சதவீதம் நிறைவு - ரன்பீர் கபூர் தகவல்'ராமாயணா' இரண்டாம் பாகம் 50 சதவீதம் ... பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்தாரா மல்லிகா ஷெராவத்? பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap