Advertisement

சிறப்புச்செய்திகள்

தெலுங்கில் நான் தேடிப்போகிறேன்... தமிழிலோ என்னை தேடி வருகிறது. ; நடிகர் சந்தீப் கிஷன் | கணவருடன் ஷூட்டிங்கை முடித்த கையோடு அவரது தம்பி பட புரமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா | சிவகாமியின் செல்வன், முத்து, தாய் கிழவி - ஞாயிறு திரைப்படங்கள் | அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம் | மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நிறைவு | கரீனா கபூருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் பார்வதி | தியேட்டரில் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் | முதல் இடத்தை நோக்கி முன்னேறுகிறாரா மமிதா பைஜூ? | பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் | குழந்தை தான் முக்கியம், பிக்பாஸ் முக்கியமல்ல : ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : சிவாஜிக்கு முதல் கார் வாங்கி கொடுத்த பத்மினி

07 ஆக, 2026 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Flashback-Padmini-bought-Shivaji-his-first-car
Advertisement

1954ம் ஆண்டு சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் 'எதிர்பாராதது'. சிவாஜி, பத்மினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம். பின்னாளில் சிறந்த இயக்குனராக இருந்த சி.வி.ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம்.

கதைப்படி சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர். இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்து கொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னையாகி விடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி, சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார்.

இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை.

கன்னத்தில் விழுந்த அடியின் காரணமாக அவருக்கு ஜுரம் ஏற்பட்டு ஓய்வெடுத்து வந்தார். அதோடு நிஜமாகவே பத்மினி அடித்ததால் கவலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் சிவாஜியை சமாதானப்படுத்த பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது பியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போட்டோ, வீடியோ சட்டவிரோத பயன்பாடு : 15 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்ருதிஹாசன் வழக்குபோட்டோ, வீடியோ சட்டவிரோத பயன்பாடு : 15 ... பிளாஷ்பேக் : 29 லட்சத்தில் எடுக்கப்பட்ட 'புரியாத புதிர்' பிளாஷ்பேக் : 29 லட்சத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap