சல்மான் கானுக்கு பதிலாக இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய பிரபலம் | அதை 8வது டேக்குல வந்து சொல்றீங்க பாருங்க.. பக்ஸை கலாய்த்த ரஜினிகாந்த் | ஜெயிலர் 2 பார்க்க முழு தியேட்டரையும் புக் செய்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் | துப்பாக்கிச்சூடு: டைகர் ஷெராப்-க்கு முன்பு சல்மான்கான்தான் முதல் இலக்காம்! | 'இந்தியன் 3' : ஷங்கரின் கோரிக்கையை நிராகரித்த லைகா நிறுவனம்! | சூர்யாவை இயக்கும் ராம் சரண் பட இயக்குனர்! | கனடாவில் உள்ள யார்க் சினிமாஸில் 'ஜெயிலர்-2' காட்சிகள் ரத்து! | மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் : சசிகுமார் | இளம் வயதிலேயே வயதான கேரக்டர்களில் நடித்த தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் | துபாயில் நடக்கும் ‛சீன்' பட நிகழ்ச்சி : நஸ்ரியாவுக்காக காத்திருக்கும் தமிழ் ரசிகர்கள் |

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கியவர் கவுதம் ராஜ். இவரின் அடுத்த படப்பூஜை சென்னையில் இன்று நடந்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயராம் , சிம்ரன் நடிக்கிறார்கள். பஞ்சதந்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தாலும், அதில் கமல் ஜோடியாக சிம்ரன் வருவார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார்.
படம் குறித்து ஜெயராம் பேசுகையில், ஒரு சந்தோஷமான நேரம் இது. நடிகை சிம்ரன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்தேன். அதன் பின் அவருடன் ஜோடியாக தற்போது நடிக்கிறேன். மகிழ்சியாக உள்ளது என்றவர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்தினை தெரிவித்தார்.
நடிகை சிம்ரன் பேசுகையில், ஒரு சிறந்த கலைஞரால் தான் சிறந்த கதையை உருவாக்க முடியும். ஜெயராம் மிகப்பெரிய நடிகர். அவருடன் படம் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 90 மற்றும் ஜென் சி ஆகியோருக்கு நெருக்கமான கதையாக இது இருக்கும் என்றார்.
கவுதம் ராஜ் இயக்கிய ராட்சசி கல்வி பற்றிய சமூக அக்கறை கதையாக இருந்தது. கழுவேத்தி மூர்க்கன் கிராமபுற பின்னணியில் ஒரு சீரியஸ் கதையாக இருந்தது. ஆனால், இந்த படம் காதல் கலந்த காமெடியாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஆர்யாவின் பட நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.




