Advertisement

சிறப்புச்செய்திகள்

திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா | மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர் | வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி | 4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ் | இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் | முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் | ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள் | பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் | காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்

23 ஆக, 2026 - 03:22 IST
எழுத்தின் அளவு:
Irumudi-Kattu-will-be-like-Polladhavan-and-Raja-Rani-:-Music-Director-G.V.-Prakash-Kumar.
Advertisement

பொதுவாக சிரஞ்சீவி, மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, நானி போன்ற நடிகர்களின் தெலுங்கு படங்கள்தான், தமிழில் டப் ஆகும். முதன்முறையாக ரவி தேஜா நடித்த இருமுடி படத்தின் தமிழ் டப்பிங் வெளியாகி உள்ளது. சென்னையில் நடந்த இந்த படவிழாவில் ரவிதேஜா கலந்துகொண்டு பேசினார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவர் இசை படத்தின் பிளஸ் என்று கூறப்படுகிறது.

படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛நான் இசையமைத்த 'பொல்லாதவன்', 'ராஜா ராணி' படங்களின் கதை கேட்டபொழுது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது. அதுபோலவே 'இருமுடி கட்டு' படத்தின் கதை கேட்டபோதும் நிச்சயம் இது வெற்றி பெறும் என தோன்றியது. இங்கே நிறைய ஹீரோக்கள் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள். 'பாட்ஷா' படத்தில் ரஜினிக்கு எப்படி தனித்துவம் இருந்ததோ அது போலவே கமர்சியல் படங்களில் ரவி தேஜாவிற்கும் தனித்துவம் இருக்கிறது. நிறைய இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள்.

இனி இந்த பட இயக்குனர் சிவா படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி விடுவார்கள். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்த படத்திற்காக பல விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குடும்பத்தோடு நிச்சயம் நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். அனிமல், கபீர்சிங் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா போன்ற இயக்குனர்கள் கூட இந்த படத்தை பாராட்டியிருக்கிறார்கள். அவர் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். அந்த அளவுக்கு ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள்காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : ... முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap