பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் ‛கமல் ஸ்ரீதேவி' | புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே 'ழகரம்' தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சூர்யா | பட்ஜெட் 3 கோடி... வசூல் 100 கோடி... சாதனை படைத்த கன்னட படம் 'பிரேமதா ஊரலி' | நரிக்குறவர் சமூதாயம் பற்றி 2 வருடம் ஆய்வு: 'சிங்காரம்' பட இயக்குநர் | நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நடிகைகளுக்கு மனநிறைவு: ஸ்ரீதேவி அப்பல்லா | எப்போதும் மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திருங்கள் : சூர்யா பேச்சு | தமிழில் அறிமுகமாகும் கல்யாணி அனில் | பிளாஷ்பேக்: திடீர் நடிகரான திருநாவுக்கரசர் | பிளாஷ்பேக்: ஜெர்மன் ரீமேக்கில் நடித்த சிவாஜி | சோசியல் மீடியா நெகட்டிவிட்டி... கைவசம் 7 படங்கள்... அண்ணாமலை ரீமேக் : சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பேச்சு |

ஒவ்வொருவரது பள்ளி நாட்களும், கல்லூரி நாட்களும் மறக்க முடியாதவை. அதிலும் பள்ளி நாட்கள் என்ற சிறு வயதுப் பருவம் எந்த ஒரு கவலையும் இல்லாத நாட்களாக அனைவருக்குமே இருக்கும். 80களுக்கு முன்பு பள்ளிகளில் படித்தவர்களுக்கு அவர்களது நண்பர்களைத் தொடர்பில் வைத்திருந்தது குறைவாகவே இருக்கும்.
90களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மொபைல் போன், சமூக வலைத்தளங்கள், வாட்சப் என வந்துவிட்டதால் ஒரு நண்பரைக் கூட விடாமல் இன்றும் தொடர்பில் வைத்திருக்கும் வசதி வந்துள்ளது.
பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள், தங்களது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும் நாட்கள் என இன்றும் பலரது ரியூனியன் பற்றி பார்க்கும் போது நமக்குள்ளும் ஒரு ஆசை வரும்.
கொடைக்கானலில் உள்ள ஒரு கான்வென்ட்டில் படித்த நடிகர், இயக்குனர் சசிகுமார் அவரது பள்ளிக்கு ஒரு விசிட் அடித்துள்ளார். அந்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், மாணவிகள் என அனைவருடனும் அவர் பேசியது வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
“மீண்டும் என் கல்விக் கூடத்திற்கு…. கனவுகள் உருவான, நட்புகள் மலர்ந்த மற்றும் நினைவுகள் என்றென்றும் பதியப்பட்ட அந்த இடத்திற்குத் திரும்பியுள்ளேன்” என இது குறித்து பதிவிட்டுள்ளார் சசிகுமார்.