அன்பே டயானா முதல் மைக்கேல் ஜாக்சன் பயோபிக் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | ரிலீசிற்கு முன்பே 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் என 'ஸ்பிரிட்' இயக்குனர் ஆரூடம் | குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாதுரி தீட்சித் | தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி | இப்படி தான் சினிமா எடுக்குறாங்களா? பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் சிறிய நுணுக்கங்கள் | 'சந்திரோல்சவம்' : மீண்டும் ஒரு மோகன்லால் படம் ரீ ரிலீஸுக்கு தயார் | டாக்சிக் முதல்நாளில் ரூ.150 கோடி வசூல் | சன்னி லியோன் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மூத்த தெலுங்கு நடிகர் ஜி.வி.நாராயண ராவ் மரணம் | ஒருபோதும் மாற மாட்டேன் - பிரியா பவானி சங்கர் |

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பல ரஜினி ரசிகர்களுக்கு நீண்டநாள் கனவாக இருக்கிறது. அதேபோல திரையுலகில் உள்ளவர்களுக்கும் கூட அவரை சந்திக்க வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது ஆசை.
ரஜினியை திடீரென சந்தித்த மகிழ்ச்சியில் சில நடிகைகள் அடுத்தடுத்து புகைப்படங்களையும், அவரை சந்தித்தது பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
ரஜினியுடன் 'சிவாஜி' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயா, “ஒரு சாதனையாளரை சந்திக்கும் போது, புகைப்படம் எடுத்துக் கொள்வது அவசியம்தானே,” என்று பதிவிட்டுள்ளார்.
80களில் நடன நடிகையாக பிரபலமாக இருந்த டிஸ்கோ சாந்தி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே விமானத்தில் நமது ஒப்பற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. உங்களை நேசிக்கிறேன் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் நடிகை கயாடு லோஹர், “நான் இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறேனோ என்று தோன்றுகிறது. அவருடைய தீவிர ரசிகையாக இருந்து, ஒரு விமானப் பயணத்தில் ரஜினிகாந்த் சாருக்கு மிக அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. இது நடந்தது என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்த அந்தத் தருணத்தில், என் மனதில் 'சுந்தரி' பாடல் ஒலிக்கத் தொடங்கியது, நான் அப்படியே ஒரு கனவுலகில் மிதக்கத் தொடங்கினேன்.
எவ்வளவு ஒரு அற்புதமான, எதிர்பாராத தருணம். என் நாளே இனிதாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல இருக்கிறேன்,” என நீண்ட பதிவு போட்டுள்ளார்.




