நார்மலைஸ் ஆக்கப்படுகிறது வன்முறை : வெள்ளித்திரையில் தெறிக்குது ரத்தக்கறை | பிளாஷ்பேக்: கஸ்தூரி ராஜா, ராஜ்கிரண் கலையுலகப் பயணத்தின் முதல் வெற்றி | ஐமேக்ஸில் வெளியாகும் சூரியின் ‛மண்டாடி' | 22 ஆண்டுகள் போதைக்குள் இருந்தேன் : பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா | வசனமே இல்லாத கேரக்டரில் நடிக்கும் ரைசா வில்சன் | கூடுதல் காட்சிகளுடன் மீண்டும் வெளியாகும் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' | பாலியல் கொடுமை வழக்கில் தெலுங்கு இயக்குநர் பவன் கைது | பிளாஷ்பேக் : சிவாஜி ஜோடியாக நடித்த மனோரமா | பிளாஷ்பேக் : சரோஜாதேவிக்கு சுளுக்கெடுத்த ஆர்.பி.விஸ்வம் | யு டியூபைக் கலக்கும் மூன்று தலைமுறைப் பாடல்கள் |

2026ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று 'டாக்சிக்'. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியானது.
படத்தின் முதல் காட்சி முடிந்த உடனேயே இப்படத்திற்கான விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. முழுவதுமாக நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இப்படத்திற்காக வந்து கொண்டிருக்கிறது.
'ஏ' சான்றிதழ் பெற்ற படம், படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்பத்தினர் கூட இப்படத்தைப் பார்க்காமல் தவிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது.
நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே ஒரு பக்கம் வந்தாலும், இப்படத்தின் முதல் நாள் வசூல் எப்படியும் 100 கோடியைக் கடந்திருக்கும் என்று முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும், யஷ் நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் போல இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்பில்லை என்றுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.




