பொங்கல் ரேசில் இன்னொரு படமா...? : அருண் விஜயின் பிறந்தநாளில் இருளன் முதல்பார்வை வெளியீடு | தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி விஜயகுமாரை அடையாளம் காட்டிய 'அம்மா வந்தாச்சு' | பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை | டோரதியால் பெருமை - கீர்த்தி சுரேஷ் : மேடையிலேயே மோதிரம் பரிசளித்த மிஷ்கின் | சூர்யா படத்தில் வில்லனா? கோபிசந்த் தரப்பு மறுப்பு | சல்மான் கானின் 'மாத்ருபூமி' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் |

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்த ஆச்சி மனோரமா, 200 படங்களுக்கு மேல் சிவாஜியுடன் நடித்துள்ளார். 'பொம்பள சிவாஜி' என்ற பெயரையும் பெற்றார். காமெடி மற்றும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்த மனோரமோ சிவாஜி ஜோடியாக ஒரே ஒரு படத்தில் நடித்தார் அந்தப் படம் 'ஞான பறவை'.
வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில், 1991ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ஹரிஷ் குமார், சசிகலா இளம் நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். ராஜசேகர், வி. கே. ராமசாமி, காந்திமதி, ராஜிவ், சின்னி ஜெயந்த், சார்லீ, கே. எஸ். ரகுராம், சுதா, ப்ரியா, சுதா, தில்லை ராஜன், குமரன், சக்தி தாமு, முத்துக்குமார், டாக்டர் ராஜேந்திரன், பிரகாசம், மாஸ்டர் சரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.ஆர். தனபாலன் தயாரிக்க, எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
ஒரே செல்ல மகளின் காதலும், தற்கொலையும் ஒரு முதிய தம்பதிகளை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அந்த முதிய கணவன், மனைவியாக சிவாஜி, மனோரமா நடித்திருந்தார்கள்.




