படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? இயக்குனரை மிரட்டிய நடிகர் ஜெயசூர்யா | நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோனு சூட் நேரில் சென்று உதவி | கார் மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் பவன் கல்யாண் பட ஆர்ட் டைரக்டர் மகன் கைது | ரூ.200 கோடி வசூலைக் கடந்த இருமுடி | அல்லு அர்ஜுன், லோகேஷ் படத்திற்கு இசையமைக்க அனிருத் சம்பளம் எவ்வளவு | யஷ்ஷிற்கு ஆதரவாக ஆதித்யா தர் போட்ட பதிவு | அஜய் தேவ்கனின் புதிய ஹாரர் திரில்லர் படம் தொடங்கியது | அடுத்தடுத்து புறக்கணிப்பு: கயாடு லோகருக்கு என்னாச்சு? | லண்டனுக்கு திரிஷா சென்றது ஏன் | ஜெயிலர் 2 இசை வெளியீடு எப்போது... எங்கே...? |

ப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'விடியும் காத்திரு'. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்தராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சி.சத்யா இசையமைக்க, ஜி.தாமோதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது “ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காகச் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்படும் அனுபவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்” என்றார்.