அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக் | 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' | தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா | ‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | அதிர்ச்சி கொடுத்த அக்ஷய் குமாரின் ஹைவான் | ஓடிடி தர வரிசையில் 5வது இடம் பிடித்த மாதவனின் ஜிடிஎன் | ஒரே நாளில் மோதும் நாகார்ஜுனா, பால கிருஷ்ணா படங்கள் | விஸ்வாம்பரா வெளியீட்டுப் பிரச்னையை தீர்க்க சிரஞ்சீவியை அணுகிய தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 18-ல் தெலுங்கில் வெளியாகும் ஹனுமான் அன்ஷ் | வீரபாகு முதல் கைப்புள்ள வரை... : வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் |

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வந்த படம் டாக்சிக். எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. படத்திற்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரத்திற்கு ஏற்ப படம் இல்லாதததால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளில் தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான துரந்தர் பட புகழ் ஆதித்யா தர், யஷ்ஷிற்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது திரையுலகில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது, யஷ்ஷின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் விமர்சனங்களும் ட்ரோல்களும் குவிந்து வரும் வேளையில், ஹிந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் ஒருவர் பகிரங்கமாக யஷ்ஷிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது செய்திகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொடக்கத்தில் யஷ்ஷின் டாக்சிக் படமும் ஆதித்யா தரின் துரந்தர்: தி ரிவெஞ்ச் படமும் ஒரே நேரத்தில் மோத திட்டமிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஆதித்யா தர் காட்டியுள்ள இந்த நட்பு ரீதியான சைகை மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.