Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ராமாயணா' படத்திற்கான ஊதியத்தில் யஷ் வகுத்துள்ள அட்டகாசமான திட்டம்!

07 செப், 2026 - 06:01 IST
எழுத்தின் அளவு:
Yashs-pay-per-view-plan-for-Ramayana!
Advertisement


கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26ல் திரைக்கு வந்த படம் 'டாக்சிக்'. இந்த படம் இதுவரை பாக்ஸ் ஆபீசில் 328 கோடி வசூலித்துள்ளது. அதோடு, ஆங்கிலத்தில் இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டபோது வெறும் 1.40 லட்சம் மட்டுமே வசூலித்து படக்குழுவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் டாக்சிக் படத்தை அடுத்து ஹிந்தியில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தை நமித் மல்கோத்ராவுடன் இணைந்து தயாரித்து வில்லனாகவும் நடித்துள்ளார் யஷ். இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய லாபத்தை சம்பாதிக்க தற்போது நடிகர் யஷ் ஒரு பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிகிறது. சினிமா வட்டாரத் தகவல்களின்படி, இப்படத்தின் இரண்டு பாகங்களின் தென்னிந்திய விநியோக உரிமையைப் பெற அவர் பரிசீலித்து வருகிறார்.

இது யஷிற்கு மிகவும் லாபகரமான ஒப்பந்தமாக அமையும். இந்த இரண்டு பாகங்கள் கொண்ட பிரமாண்ட காவியப் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதுடன், திரையரங்குகளில் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றால், இந்த விநியோக ஒப்பந்தத்தின் மூலம் யஷ் 100 கோடிக்கும் அதிகமாகச் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது. நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ஸ்ரியா சரண், காஜல் அகர்வால் மற்றும் சன்னி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராமாயணா படத்தின் முதல் பாகம் வருகிற நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சர்தார்-2வை தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாகும் ஆஷிகா ரங்கநாத்!சர்தார்-2வை தொடர்ந்து ஸ்ரீ ... பரபரப்பை ஏற்படுத்திய ரவி மோகன் - கெனிஷா புகைபிடிக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய ரவி மோகன் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap