டிஸ்கோ சாந்திக்கு என்னாச்சு? | ‛முருகா' அசோக் உடன் ஒரே படத்தில் அறிமுகமாகும் 3 ஹீரோயின்கள் | புதுமுகங்களின் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை | 'பீப்' டைட்டிலுக்கு என்ன அர்த்தம் | மீண்டும் இணையும் சசிகுமார், சமுத்திரகனி | பிளாஷ்பேக்: டிராப் ஆன எம்ஜிஆர் படத்தை மீண்டும் எடுத்த ஜேப்பியார் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரை பேயாக சித்தரித்ததால் தோல்வி அடைந்த படம் | சோஹா அலிகானிடமிருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை - குணால் கெமு | நடிகர் ஆனந்த் ராமை கரம்பிடித்தார் நடிகை பிரிகிடா | பாகுபாடு பார்க்காமல் இசையமைக்கும் இளையராஜா |

தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் டேவிட் ரெட்டி. ஹனுமா ரெட்டி யக்கண்டி இப்படத்தை இயக்குகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்கால பின்னணி அதிரடிக் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் மரியா ரியா போஷாப்கா கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று ரம்யா கிருஷ்ணனின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் அவர், கமலா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், அவர் எதிரிகளை வீழ்த்திய பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாளுடன் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கமலா ரெட்டி கதாபாத்திரத்தை இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரமாகத் தயாரிப்பாளர்கள் சித்தரித்துள்ளனர். மேலும், இந்த வேடம் ரம்யா கிருஷ்ணனின் திரைவாழ்க்கையில் மற்றொரு மறக்க முடியாத கதாபாத்திரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




