விஜய் சந்திப்பை தவிர்த்தாரா பவன் கல்யாண்? | நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா திரிஷா? | ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் சாய் பல்லவி! | 'ரணபாலி' எனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என்கிறார் விஜய் தேவரகொண்டா! | ஜெயிலர் 2 : 1.1 மில்லியன் கடந்த அமெரிக்க பிரிமியர் முன்பதிவு | ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ஒரு தலைவர் : அனிருத் பதிவு | ஜெயிலர் 2 ரிலீஸ் : சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் படக்குழு | சென்னை வீட்டை விற்றது ஏன் : நெப்போலியன் சொன்ன புது காரணம் | மம்முட்டியின் ஓம் டப்பிங்கை உன்னிப்பாக கவனித்த ஜெயசூர்யா | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ‛மண்டாடி' வில்லன் நடிக்கும் புதிய படம் |

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் 'ஜெயிலர் 2'. அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஹிந்தி நடிகை வித்யா பாலன், காந்தா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வில்லி வேடத்தில் நடித்தபோது சிகரெட் பிடித்து, அந்தப் புகையை ரஜினிகாந்தின் முகத்தை நோக்கி ஊதும் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
இது குறித்து வித்யாபாலன் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த வேடத்தில் எனது தன்னம்பிக்கையைக் காட்ட வேண்டியிருந்த போதிலும், ரஜினியின் முகத்தில் சிகரெட் பிடித்தபடி அந்த புகையை ஊத வேண்டும் என்றபோது, மிரண்டு விட்டேன். அந்த காட்சியில் மிகுந்த பதட்டத்துடன்தான் நடித்தேன். அதில் நடிப்பது எனக்கு மிகபெரிய சவாலாக இருந்தது'' என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.
இந்த ஜெயிலர்-2 படத்தில் ரம்யாகிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, யோகிபாபு, மிர்னா மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளளார்.