சினிமா எப்போதும் என் வாழ்க்கையில் முக்கியமான ஓர் அங்கம் : ஈஷா தியோல் | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ், பிரீத்தி முகுந்தன் | ஓடிடி.,க்கு வந்தாச்சு 'ஜெயிலர்-2': மிஸ் பண்ணிடாதீங்க..! | மக்கள் காவலன் படத்தில் பாடிய அதிதி ஷங்கர் | 2026ல் ஹாட்ரிக் 200 கோடி : சூர்யாவின் அடுத்த படம் எப்போது ரிலீஸ்? | பிளாஷ்பேக்: பிரபல இயக்குநர்களின் முதல் திரைப்படங்களை அலங்கரித்த முத்தான நட்சத்திர நாயகி | அஜித்தின் 'டேர் டெவில்' படப்பிடிப்பு இன்று ஆரம்பம் | 'இஞ்சி வெல்லம்' ஜனவரி 29 ரிலீஸ் : காரணம் என்ன ? | 'மரகத நாணயம் 2'வில் நிக்கி கல்ராணிக்கு அதிக முக்கியத்துவம் : இயக்குநர் தகவல் | மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகும் பேமிலி ஆக்சன் திரில்லர் படம் |

மறைந்த இசையமைப்பாளர் தேவா, 450க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் பல நூறு பாடல்களை தந்துள்ளார். அவரது ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியவை. பக்தியாகட்டும், வெஸ்டர்னாகட்டும், மெலோடியாகட்டும், நாட்டுப்புறம் மற்றும் கானா பாடல்கள் ஆகட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். இதில் மதுரைக்கு என்று ஒரு அடையாளமாக தேவாவின் பாடல் உள்ளது. அது தான் ‛வாராரு வாராரு... அழகர் வாராரு...' பாடல்.
1999ம் ஆண்டு பாரதி இயக்கத்தில் விஜயகாந்த், லைலா, மேஜர் சுந்தர்ராஜன், சோனு சூட், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் இது. இதற்கு தேவா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜ பெருமாளான கள்ளழகரை கொண்டாடும் விதமாக ‛வாராரு வாராரு அழகர் வாராரு....' என்ற பாடல் இடம் பெற்றது. இதை தேவாவே பாடியும் இருந்தார். இந்த பாடல் பட்டித்தொட்டியெங்கும் கொண்டாடப்பட்டது.
இன்றும் மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் இறங்கும் நிகழ்வு மற்றும் அவர் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வரை எங்கும் பார்த்தாலும் இந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த பாடல் ஒலித்தாலே மதுரை மக்களுக்கு தானாகவே பக்தியை தாண்டி ஒருவித வைப் ஏறும். அந்தளவுக்கு இந்த பாடல் மதுரை மக்களின் உயிரில் கலந்த ஒன்றாகிவிட்டது.