சினிமா எப்போதும் என் வாழ்க்கையில் முக்கியமான ஓர் அங்கம் : ஈஷா தியோல் | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ், பிரீத்தி முகுந்தன் | ஓடிடி.,க்கு வந்தாச்சு 'ஜெயிலர்-2': மிஸ் பண்ணிடாதீங்க..! | மக்கள் காவலன் படத்தில் பாடிய அதிதி ஷங்கர் | 2026ல் ஹாட்ரிக் 200 கோடி : சூர்யாவின் அடுத்த படம் எப்போது ரிலீஸ்? | பிளாஷ்பேக்: பிரபல இயக்குநர்களின் முதல் திரைப்படங்களை அலங்கரித்த முத்தான நட்சத்திர நாயகி | அஜித்தின் 'டேர் டெவில்' படப்பிடிப்பு இன்று ஆரம்பம் | 'இஞ்சி வெல்லம்' ஜனவரி 29 ரிலீஸ் : காரணம் என்ன ? | 'மரகத நாணயம் 2'வில் நிக்கி கல்ராணிக்கு அதிக முக்கியத்துவம் : இயக்குநர் தகவல் | மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகும் பேமிலி ஆக்சன் திரில்லர் படம் |

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஜெயிலர் 2
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், எஸ். ஜே. சூர்யா,யோகி பாபு, மிர்னா மேனன், வித்யா பாலன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர் 2'. அக்டோபர் 15ம் தேதி வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. சுமார் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் இன்று (நவ.,12) அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
அன்பில் அவன்
புதுமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்பில் அவன்'. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படத்திற்குப் போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். இந்த படம் நாளை (நவ.,13) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.
ரணபாலி
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அவரது காதல் மனைவி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ரணபாலி'. இந்த படம் நாளை (நவ.,13) நெட்பிளிக்ஸில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாந்த்ரா
மலையாள இயக்குநர் அருண் கோபி இயக்கத்தில் திலீப், தமன்னா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பாந்தரா'. இந்த படம் நாளை (நவ.,13) ஜீ5யில் வெளியாகவுள்ளது. வருகிறது. சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து திலீப் படம் ஒன்று ஓடிடியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரேஸி கல்யாணம்
இயக்குநர் பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் தருண் பாஸ்கர் தஸ்யம், அனுபமா பரமேஸ்வரன், வி. கே. நரேஷ், கீர்த்தி அகில் உத்தேமாரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கிரேஸி கல்யாணம்'. இந்த படம் நாளை (நவ.,13) ஆஹாவில் வெளியாகவுள்ளது.