நான் அம்மா செல்லம், அப்பா உடன் இணைந்து நடிக்க ரெடி : துல்கர் சல்மான் | இந்தியா சார்பாக ஆஸ்கர் அடிக்குமா 'கோந்தல்'? : படத்தில் அப்படி என்ன ஸ்பெஷ்! | கதை தேர்வில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஸ்ரீலீலா | சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் படங்கள் | சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்! | மைசா படத்தின் விளம்பரப் பணிகளில் இறங்கப்போகும் ராஷ்மிகா | சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது | பிளாஷ்பேக்: கதையின் நாயகனாகவும் கதாசிரியராகவும் எம் ஜி ஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம் | 957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல் | சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென் |

சமீபத்தில் நடிகர் சூரியின் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியான ‛மண்டாடி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. கடற்கரை கதைக்களமாக கொண்டு அதில் பாய்மரப்படகு போட்டி என்கிற வித்தியாசமான பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதில் நட்பு துரோகம் எல்லாம் கலந்து ஒரு அழகான ஆக்சன் ட்ராமாவாக இந்த படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி. படத்தில் நடித்த சூரி மட்டுமல்ல வில்லனாக நடித்த நடிகர் சுகாஷூம் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் மண்டாடி வெளியானது. இதில் படத்தை பார்த்துவிட்டு நடிகர் மாதவன் தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார். “மற்றும் ஒரு தமிழ் சினிமாவின் வைரம்” என இந்த படத்தை புகழ்ந்துள்ள மாதவன் “என்ன ஒரு படம்.. என்ன ஒரு ஒளிப்பதிவு.. அருமையான கதை சொல்லல் மற்றும் இயக்கம், நடிப்பு.. எனது சகோதரன் சூரி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவிற்கும் தலைவணங்குகிறேன்” என்று வெகுவாக புகழ்ந்துள்ளார்.




