எதிரிகளை ஒழிப்பதற்கு நான் பயன்படுத்தும் தந்திரம் : மம்முட்டி அதிரடி | தமிழுக்கு வரும் திவிஜா பிரபாகர் | பாலிவுட்டில் கால் பதிக்கும் அர்ஜூன்தாஸ் | கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‛செங்குலம்' | சர்ச்சையை ஏற்படுத்திய கரீனா கபூரின் மரகத நெக்லஸ் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் கிரைம் கதையை காதல் கதையாக மாற்றிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : எம்.ஆர்.ராதாவால் நடிகரான கண்ணதாசன் | 'ஆபரேஷன் ஓம்' செம்மரக் கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் : ‛ஓம்' டிரைலர் எப்படி இருக்கு...? | கனவு நனவான தருணம் : மிர்னா மேனன் | கீர்த்தி சுரேஷ் - மிஷ்கினின் ‛சத்தியவான் சாவித்திரி' டிரைலர் வெளியானது |

'கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை' படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படம் தர விரும்பினார் ஆர்.கே.செல்வமணி. முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கும் ஹீரோ விஜயகாந்த்தான் காரணம் என்ற ஒரு விமர்சனம் இருந்ததால் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் கூறுவார்கள்.
அப்படி அவர் யூத் சப்ஜெக்டாக உருவாக்கிய படம்தான் 'செம்பருத்தி'. இதற்காக மும்பையில் இருந்து ராமன் கபூர் என்ற மாடலிங் இளைஞரையும், காயத்ரி என்பவரையும் நாயகன் நாயகியாக முடிவு செய்தார். செம்பருத்தியில் பானுமதி நடித்த கேரக்டரில் சுசித்ரா என்பவர் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் எடுத்த வரை போட்டுப் பார்த்ததில் ஆர்.கே.செல்மணிக்கு திருப்தி இல்லை. படத்தின் கதையை விட நடிப்பர்களின் வசீகரமும், சுறுசுறுப்பும் முக்கியம் என்று கருதினார். அது அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் படம் டிராப் ஆனது.
அதன்பிறகு மீண்டும் புதுமுகங்களை தேடினார். ஒரு திருமண விழாவில் சந்தித்த ரோஜாவை நாயகியாக்கினார். நாயகனாக சூர்யாவை நடிக்க வைக்க அவரது தந்தை சிவகுமாரை அணுகினார். 'அவன் இப்போது படித்துக் கொண்டிருக்கிறான். நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை' என்று கூறிவிட்டார் சிவகுமார்.
இந்த நிலையில் பிரசாந்தின் தந்தை ஆர்.கே.செல்வமணிக்கு புத்தாண்டு வாழ்த்து ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்தில் பிரசாந்தின் படம் இடம்பெற்றிருந்தது. உடனே இவர்தான் நாயகன் என்று முடிவு செய்தார். படம் வெளியாகி பெரிய வெற்றியையும் பெற்றது.