பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா |

சென்னையில் நடந்த 'சிட்டுக்குறிஞ்சி' பட நிகழ்ச்சியில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளரும், இயக்குனருமான ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ''இப்போது பெரிய படங்கள், பெரிய நடிகர்கள் சினிமா விழாக்களை நடத்துகிறார்கள். அதில் சினிமா சங்க நிர்வாகிகளை அழைப்பது இல்லை. தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம் என பல சங்கங்கள் இருந்தாலும், யாரையும் அவர்கள் அழைப்பது இல்லை. ஏன், மீடியாவை கூட அழைப்பது இல்லை. அவர்களை ரெட் கார்பட் வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். விழா நடக்கும் இடத்திற்கு அனுமதிப்பது இல்லை.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட போக்கு நடக்கிறது. மக்களிடம் ஒரு படம் போய் சென்றால்தான் அது வெற்றி அடையும். பெரிய படங்கள் மட்டும் இப்படி செய்கிறார்கள். மற்ற சின்ன பட்ஜெட் படங்களில் இந்த பிரச்னை இல்லை. அதனால், யார் அழைத்தாலும் நான் மறக்காமல் வாழ்த்திவிட்டு வருகிறேன். இந்த படத்தில் இயக்குனர் ஜி.எம்.குமார் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். அவர் சென்னை திரைப்பட கல்லுாரி மாணவர், எனக்கு ஜூனியர். அந்த காலத்தில் பல ஒளிப்பதிவாளர்கள் அங்கே படித்தார்கள். அவர்களுக்குள் கடும் போட்டி இருக்கும். எல்லா படங்களிலும் அவர் பணியாற்றுவார்கள். அவர்களின் எனக்கு மிகவும் பிடித்தவர் ஒளிப்பதிவு படித்த ராஜூவ்மேனன். அவர் யாருடனும் சண்டைபோடமாட்டார்'' என்றார்.




