சமந்தாவிற்கு ஆண் குழந்தை : பெயரையும் அறிவித்தார் | பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார் | பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! |

தமிழ் சினிமாவில் இந்த வாரம் நவம்பர் 20ம் தேதி 'ஓம், அப்பா குட்டி, சத்தியவான் சாவித்திரி' உட்பட பல படங்கள் வருகின்றன. இதில் 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை படக்குழு ஏனோ தொடங்கவே இல்லை. பிரவீன் எஸ்.விஜய் இயக்கிய இந்த படம் கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி உள்ளது. கீர்த்தி சுரஷே், மிஷ்கின் இருவரும் வக்கீல்களாக வருகிறார்கள். இவர்களின் போட்டியே படக்கரு.
மற்ற படங்களில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் ஆகியோர் பிஸியாக இருப்பதால் இந்த பட விளம்பர நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் படம் வருகிறதா? வரவில்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நேரம் கொடுத்தால்தான் பட நிகழ்ச்சிகள் நடக்கும் நிலை. இன்னும் சில நாட்களில் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவுக்கு இப்படியொரு சோதனை. இதன் போட்டி படங்களான 'ஓம், அப்பா குட்டி' குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். வேறு பைனான்ஸ் சிக்கலா? படத்துக்கு வேறு பிரச்னையா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. மற்ற பட நிகழ்ச்சிகளுக்கு சென்று மணிக்கணக்கில் பேசும் மிஷ்கின் தனது படத்துக்கு வராதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




