பெத்தி பாடல் சர்ச்சை குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல் | இஞ்சி வெல்லம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு | கிங் : கரீனா கபூரின் சிறப்புப் பாடல் நாளை வெளியாகிறது | வாரணாசி படத்துக்காக உடல் எடையை குறைத்த மகேஷ் பாபு | டிவி விவாத நிகழ்ச்சி சர்ச்சை : சேரன், திவாகர் மோதல் | கல்வியாளர் கந்தசாமி நாயுடு வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: இரட்டை எடிட்டர்கள் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த படம் | அர்ஜுன் மகள் குறித்து அவதூறு : பயில்வான் ரங்கநாதனிடம் 3 மணி நேரம் போலீஸ் விசாரணை | பிக்பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு |

தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குநர்கள், இரட்டை இசை அமைப்பாளர்கள், இரட்டை சண்டை இயக்குநர்கள் என ஒரே பிரிவல் இணைந்து பலர் பணியாற்றி உள்ளனர். இரட்டை எடிட்டர்களாக பணியாற்றியவர்கள் பி.லெனின் மற்றும் மற்றும் பி.டி.விஜயன்.
பி.லெனின் தமிழ் சினிமாவின் முக்கிய எடிட்டர். எளிமையாக வாழும் இவர் பிரமாண்ட படங்களுக்கும் எடிட்டராக பணியாற்றி உள்ளார். சிறு பட்ஜெட் படங்களுக்கும் பணியாற்றி உள்ளார். பழம்பெரும் இயக்குநரான பீம்சிங்கின் மகன் இவர். 'உதிரிபூக்கள்' படத்தின் மூலம் எடிட்டரான இவர் பின்னர் தனது உதவியாளராக பணியாற்றிய வி.டி.விஜயனுடன் இரட்டை எடிட்டராக 100க்கும் மேற்பட்ட படத்தில் பணியாற்றி உள்ளார்.
நாயகன், அஞ்சலி, சூரியன், ஆவாரம்பூ, ஜென்டில்மேன், காதலன், இந்தியன், மோகமுள், வேலாயுதம் போன்றவை இவர்கள் இணைந்து பணியாற்றிய முக்கிய படங்கள். 'காதலன்' படத்திற்காக இருவரும் இணைந்து தேசிய விருது பெற்றனர். பல வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி பிரிந்தது. பி.லெனின் ஆவண படங்கள், சுயாதீன படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தினார். வி.டி.விஜயன் மலையாள படங்களில் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டினார்.




