காசி அண்ணா தியேட்டரில் கைலாயம் போல் செட் அமைத்த ரசிகர்கள் | வில்லியாக நடிக்க ஆசை: 'மொத ராத்திரி' பானு பிரியா | அழகிற்கு அப்படி என்ன மெனக்கெடல் ஸ்ரீபவியின் ரகசியம் | 'ஏஒடி' படம் பார்த்துவிட்டு சவாலில் தோல்வி : ஒரு லட்சம் கொடுத்த இயக்குனர் சுகுமார் | 'டேர் டெவில்' தொடர் படப்பிடிப்பு : அஜித்தின் அன்புக் கட்டளை | பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள் | சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர் | மிக விரைவில் வாரணாசி அப்டேட் : ராஜமவுலி சொன்ன தகவல் |

ஹிந்தியில் ராஞ்சனா, அத்ரங்கி ரே, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ஆகியோர் மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களது நான்காவது கூட்டணியில் உருவாகவுள்ள இப்படம், பிரம்மாண்டமான காட்சி அனுபவத்தை தரும் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட படமாக உருவாக்கப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது ஒரு காதல் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த ஒரு ஆக்ஷன் விருந்தாகவும் இருக்குமாம். கடந்த காலத்து உலகத்தை மிகத் துல்லியமாக மீண்டும் உருவாக்கி, அதன் பின்னணியில் இந்த ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட உள்ளதாம். இந்த கதைக்களம் படத்தின் காட்சி மொழியை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே இதற்கு முன்பு ஒன்றாகப் பயணிக்காத ஒரு புதிய கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.




