Advertisement

சிறப்புச்செய்திகள்

காசி அண்ணா தியேட்டரில் கைலாயம் போல் செட் அமைத்த ரசிகர்கள் | வில்லியாக நடிக்க ஆசை: 'மொத ராத்திரி' பானு பிரியா | அழகிற்கு அப்படி என்ன மெனக்கெடல் ஸ்ரீபவியின் ரகசியம் | 'ஏஒடி' படம் பார்த்துவிட்டு சவாலில் தோல்வி : ஒரு லட்சம் கொடுத்த இயக்குனர் சுகுமார் | 'டேர் டெவில்' தொடர் படப்பிடிப்பு : அஜித்தின் அன்புக் கட்டளை | பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள் | சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர் | மிக விரைவில் வாரணாசி அப்டேட் : ராஜமவுலி சொன்ன தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாத்விகா வீரவல்லிக்கு இயக்குனர் ராஜமவுலி பாராட்டு

28 நவ, 2026 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Director-Rajamouli-lauds-Sadhvika-Veeravalli
Advertisement

பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'.

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ராஜமவுலி, படத்தின் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி குறித்து பாராட்டிப் பேசினார்.

“தெலுங்கு ரசிகர்கள் எந்த மொழி அல்லது திரையுலகிலிருந்து வரும் கதாநாயகிகளையும் ஏற்றுக் கொள்வார்கள். இருப்பினும், ஒரு தெலுங்குப் பெண் பெரிய நட்சத்திரமாக வளர வேண்டும் என்ற ஆசை நம் மனதில் எப்போதும் இருக்கும். ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா போன்ற நடிகைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகையும் அந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது சாத்விகா வீராவல்லி வந்திருக்கிறார்.

நீங்கள் இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய உயரத்தை அடைவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. எங்களுக்காக விரைவில் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்,” என்று பாராட்டினார்.

மேலும், “துல்கர் சல்மான் இப்படத்தைத் தனது தோள்களில் சுமந்து சென்றுள்ளளார், அவரது பங்களிப்பு இல்லாமல் இப்படம் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்காது” என்றும் குறிப்பிட்டார். இயக்குனர் பவன், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் பாராட்டின் பேசினார் ராஜமவுலி.

இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக சென்னையில் நடந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அரவிந்த், சாத்விகா வீரவல்லியை ஒரு தமிழ்ப் பெண் என்று குறிப்பிட்டார். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் அவரை தெலுங்குப் பெண் என்று சொல்லி பாராட்டி வருகிறார்கள்.

சாத்விகாவின் அப்பா தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். விஜயவாடா அருகிலுள்ள வீரவல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பல தலைமுறைகளுக்கு முன்பே அவர்களது குடும்பம் காஞ்சிபுரம் அருகிலுள்ள செவிலிமேடு என்ற கிராமத்தில் குடியேறி இருக்கிறார்கள். சாத்விகாவின் அம்மா தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை கலாஷேத்ராவில் படித்தவர். பின்னர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் செட்டில் ஆகியுள்ளார்கள். இத்தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சாத்விகா தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
4வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி4வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் ... கதை நாயகியாக ஜெயசுதா நடித்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது கதை நாயகியாக ஜெயசுதா நடித்த படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap