நான் அம்மா செல்லம், அப்பா உடன் இணைந்து நடிக்க ரெடி : துல்கர் சல்மான் | இந்தியா சார்பாக ஆஸ்கர் அடிக்குமா 'கோந்தல்'? : படத்தில் அப்படி என்ன ஸ்பெஷ்! | கதை தேர்வில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஸ்ரீலீலா | சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் படங்கள் | சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்! | மைசா படத்தின் விளம்பரப் பணிகளில் இறங்கப்போகும் ராஷ்மிகா | சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது | பிளாஷ்பேக்: கதையின் நாயகனாகவும் கதாசிரியராகவும் எம் ஜி ஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம் | 957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல் | சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென் |
தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஈ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார்.
லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.



இந்நிலையில் இன்று (மார்ச் 14) காலை 10.07 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 61.
ஜனநாதனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, மூளை செயலிழந்து விட்டதாக கூறப்பட்டது. ரத்த கசிவை நீக்க டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து வந்தனர். என்றாலும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வந்ததாக கூறப்பட்டது.




