Advertisement

சிறப்புச்செய்திகள்

கடவுள் உருவங்களாக ரசிகர்களின் மனங்களில் பதிந்த நடிகர், நடிகைகள் | தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி அளித்த இளம் நடிகர், நடிகைகளின் மரணங்கள் | 'அதோமுகம்' படக் கூட்டணியின் அடுத்த படம் 'மேரேஜ் ஸ்டோரி' : டீசர் வெளியீடு | காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்' | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு அதிக வெற்றிகளை அள்ளி வழங்கிய 1972ம் ஆண்டு | இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகிறது 'சங்கராபரணம்' | இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிற்கு தேர்வான ‛‛தாய்கிழவி, அறிவு'' | 34 ஆண்டுகளுக்குபின் திரைக்கு வருகிறது நீண்ட தலைப்புள்ள படம் | சினிமா சங்கங்கள் சார்பில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா | சிரஞ்சீவியின் மெகாவெர்ஸில் இணையும் பிரபாஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம் ; பல்டி அடித்த சாட்சி

01 நவ, 2026 - 12:56 IST
எழுத்தின் அளவு:
New-twist-in-Kannada-actor-Darshan-case
Advertisement


கன்னட நடிகர் தர்ஷன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்கிற காரணத்திற்காக தனது ரசிகரான ரேணுகா சுவாமியை அடித்துக் கொன்றார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட இன்னும் 16 பேரும் இந்த வழக்கில் தற்போது சிறையில் இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட புனித் என்கிற நபர் தற்போது தான் போலீசாரிடம் அளித்த சாட்சியத்தில் இருந்து பல்டி அடித்து நீதிமன்றத்தில் வேறுவிதமாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துக் கூறப்படுவதாவது : பெங்களூருவில் உள்ள பட்டினகரே பகுதியில் உள்ள செட் பகுதியில் வேலை செய்து வந்த புனித் என்பவர் ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் அன்று தான் வேலைக்குச் சென்றபோது அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்ததாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மேலும் காரில் 5 பேர் அங்கு வந்ததாகவும், ஆனால் அவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். மேலும் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தன்னால் அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட அன்று மாலை 6:30 மணிக்கு உணவு அருந்திவிட்டு மாதேஸ்வரன் மலைக்குச் சென்றுவிட்டதாகவும், அதற்குப் பின்னர் என்ன நடந்தது என இன்று தனக்குத் தெரியாது என்றும் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். முன்னதாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்திற்கு மாறாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதால் இந்த விசாரணையில் பல்டி அடித்துவிட்டார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பிரசன்னா பி குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பதை இனிவரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து விலகுவதாக ரெஜினா அறிவிப்புடெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து ... வாரிசு இயக்குநரின் படத்தில் மோகன்லால் ; கொச்சியில் நடைபெற்ற தொடக்க விழா பூஜை வாரிசு இயக்குநரின் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap