ஓடிடி தர வரிசையில் 5வது இடம் பிடித்த மாதவனின் ஜிடிஎன் | ஒரே நாளில் மோதும் நாகார்ஜுனா, பால கிருஷ்ணா படங்கள் | விஸ்வாம்பரா வெளியீட்டுப் பிரச்னையை தீர்க்க சிரஞ்சீவியை அணுகிய தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 18-ல் தெலுங்கில் வெளியாகும் ஹனுமான் அன்ஷ் | வீரபாகு முதல் கைப்புள்ள வரை... : வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் | ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமம் விற்பனையான 'ஹைக்கூ' | மொழி குறித்து சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார் | பிளாஷ்பேக் : ராஜ்கிரண் ஹீரோவாக மாறிய தருணம் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் வாய்ப்பை தவற விட்ட நாயகன், நாயகி | 'தி பாரடைஸ்' படத்திற்கு டிரைலர் வராது ? |

கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், பிரகாஷ்ராஜ் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது ஐந்தாவது முறையாக ராயன் படத்திற்காக இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.




