Advertisement

சிறப்புச்செய்திகள்

'அப்செப்'டில் நடிகர்; திருமணத்தை எதிர்பார்க்கும் நடிகை | விமல், ஸ்ரேயா நடிப்பில் 'சண்டக்காரி': 7 ஆண்டுக்கு பின் செப்.18ல் ரிலீஸ் | மூவர்ணக் கொடியுடன் முதல்வர் விஜய், அஜித் | துருவ் விக்ரம் - ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்-தெலுங்கு இருமொழி ஆக்ஷன் படம் | அன்பால் தான் விஜய் முதல்வரானார் : 'ஆகாயம்' பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!! | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, காந்தாரா - ஞாயிறு திரைப்படங்கள் | லண்டன் கார் ரேஸை துவக்கி வைத்த முதல்வர் விஜய் : ஆரத்தழுவி வரவேற்ற நடிகர் அஜித் | அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக் | 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' | தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : மனோரமாவின் கணவரைத் தெரியுமா?

24 ஏப், 2026 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-Do-you-know-Manoramas-husband
Advertisement

மனோரமாவின் கணவரின் பெயர் ராமநாதன். அவர் ஒரு நாடக நடிகராக இருந்தார். மற்றும் நாடக கம்பெனிகளின் மேனேஜராகவும் இருந்தார். பல நாடகங்களில் மனோரமா நடிக்க வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். இதனால் மனோரமா அவரை காதலித்தார். பின்னாளில் மனோரமா சினிமாவில் பெரிய நடிகை ஆனதும், ராமநாதன் அவரது மேனேஜராக இருந்தார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்தார்.

ராமநாதன் கதையின் நாயகனாக நடித்த படம் 'கண் திறந்தது'. இந்தப் படத்தை கே.வி.ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கினார். ராமநாதன் ஜோடியாக மைனாவதி நடித்தார். இவர்களுடன் சகஸ்ரநாதம், சி.டி.ராஜகாந்தம், ஏ.கருணாநிதி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தில் ராமநாதன் சிறுவயதில் காணாமல் போன பெரும் பண்ணையார் வீட்டு பிள்ளையாக இருந்து பின்னாளில் ரங்கன் என்ற திருடனாக மாறி இறுதியில் மீண்டும் பண்ணையாராகும் கேரக்டரில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் தேடிவந்த மாப்பிள்ளை, கருந்தேழ் கண்ணாயிரம், நினைவில் நின்றவள், பிள்ளையோ பிள்ளை, முத்துச்சிப்பி, பனித்திரை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இடையில் ராமநாதனை திருமணம் செய்து கொண்டார் மனோரமா. சில மாதங்களே மனோரமாவோடு வாழ்ந்த ராமநாதன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தன்னுடன் நாடகங்களில் நடித்து வந்த பங்கஜம் என்பவரை மணந்து கொண்டு அவருடனேயே வாழ்க்கை நடத்தினார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய ராமநாதனுக்கு மனோரமோ உதவி செய்து வந்தார். அவர் இறந்த பிறகு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது மகன் பூபதியை கொண்டு இறுதி சடங்கை நடத்தினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் வாழ 2 ரிலீஸ் :  ராம்சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழுதெலுங்கில் வாழ 2 ரிலீஸ் : ராம்சரணை ... பிளாஷ்பேக் : தனக்கு எழுதிய கதையில் ராமராஜனை நடிக்க வைத்த ராஜ்கிரண் பிளாஷ்பேக் : தனக்கு எழுதிய கதையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap