Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல்வர் விஜய் தொடங்கிவைத்த போட்டி: அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? | 12 ஆண்டுகால 'திரிஷ்யம்' பயணம் குறித்து அபிஷேக் பதக் நெகிழ்ச்சி! | லோகேஷ் கனகராஜ் படத்தை கைவிட்ட அமீர்கான்: மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கிறார்! | பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு செல்ல வழி என்ன? இயக்குனர் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு! | 'மயோசிடிஸ்' நோய் கற்றுத்தந்த பாடம்: சமந்தா | 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் நடிக்கிறாரா விஜய் | விஜய் ரசிகராக நடிக்கும் முன்னாள் திமுக எம்எல்ஏ | தம்பியை கலாய்த்தார், சிவாஜியை புகழ்ந்தார் இளையராஜா | பிளாஷ்பேக்: “மணமகள்” திரைப்படம் தந்த மதிப்பிற்குரிய அறிமுகங்களும், மகத்தான மாற்றங்களும் | மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய நடிகர்கள்: 5 ஆபத்தான ஷூட்டிங் விபத்துகள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மனோரமா

04 ஜூன், 2026 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Flashback-Manorama-playing-a-negative-character
Advertisement

ஆனந்த ஜோதி பிக்சர்ஸ், அமர்ஜோதி பிக்சர்ஸ் சார்பில் வி.மோகன், வி.நடராஜன், எம்.கலா ஆகியோர் தயாரித்த படம் 'தாயா தாரமா'. கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சேகர், ரேகா, எஸ்.எஸ்.சந்திரன், ஆனந்த பாபு, டெல்லி கணேஷ், கோவை சரளா, காந்திமதி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். டி.பி.கஜேந்திரன் இயக்கி இருந்தார்.

சினிமாவில் மினிமம் கியாரண்டி கண்டென்ட் என்றால் தாயா, தாரமா தான். ஒரு ஆண் தன் மனைவிக்கும், தாய்க்கும் இடையில் கிடந்து தவிப்பதை எத்தனை கோணத்தில் சொன்னாலும் ரசிக்க முடியும், இதை சீரியசாகவும் சொல்லி பல படங்கள் வந்திருக்கிறது. காமெடியாக சொல்லியும் பல படங்கள் வந்திருக்கிறது. அப்படியான படங்களில் ஒன்று இது.

கே.ஆர்.விஜயாவின் ஒரே மகன் எஸ்.வி.சேகர். மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்தால் விபத்தில் சிக்கி விடுவான் என்று கல்லூரி வரைக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் அனுப்புகிற தாய். மருமகள் என்று ஒருத்தி வந்து விட்டால் தன்னிடமிருந்து மகனை பிரித்து விடுவாளோ என்கிற பயம் அவளுக்கு. கே.ஆர்.விஜயாவின் பயத்துக்கு தூபம் போடுகிறார் மனோராமா.

மகன் எஸ்.வி.சேகருக்கு ரேகாவுடன் திருமணம் நடந்து விடுகிறது. ரேகா ஆரம்பத்தில் நல்லபடியாக இருந்தாலும் கே.ஆர்.விஜயாவின் அதீத பயம் அவரை மாற்றிவிடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. மனோரமா நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அரிதான படங்களில் இதுவும் ஒன்று. 'தேரெழுந்தூர் சுப்புலட்சுமி பேத்தி சாவித்ரி' என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். கிளைமாக்சில் நல்லவராக மாறிவிடுவார்.

மகளுக்காக ஜெயிலுக்கு போகும் மாமியார், மருமகளால் பாதிக்கப்பட்ட மாமியார், என படத்தில் பலவித மாமியர், மருமகள்களின் கிளைக் கதைகள் மூலம் தாயா தராமா என்ற கருத்தை முன்வைத்து அதற்கான சரியான தீர்வையும் சொன்ன படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகைபிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த ... 'பிளடி பாலிடிக்சில்'  வெல்வாரா அஞ்சனா நேத்ரன் 'பிளடி பாலிடிக்சில்' வெல்வாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap