Advertisement

சிறப்புச்செய்திகள்

இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்.... பிரபல நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் வைரல் | சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத்

08 ஜூன், 2026 - 06:01 IST
எழுத்தின் அளவு:
Nurses-attire-needs-to-change-Kangana-Ranaut
Advertisement

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டாலும் இன்னொரு பக்கம் சினிமாவில் நடிப்பதையும் விடாமல் தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாரத் பாக்ய விதாதா (இந்தியாவின் விதியை நிர்ணயிப்பவர்கள்) என்கிற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது அதில் பாதிக்கப்பட்டோரை அங்கிருந்த காமா மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் போராடி 400க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய நிகழ்வை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கங்கனா இதில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 12-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து கங்கனா கூறும்போது, “மருத்துவத் துறையில் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றினாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை. இப்போதும் கூட செவிலியர்கள் அணியும் சீருடையானது இன்னும் ஆங்கிலேயர் காலத்து தாக்கத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. குறிப்பாக சீருடையில் பயன்படுத்தப்படும் தொப்பி, பின், பெல்ட் போன்ற விஷயங்கள் அமெரிக்க கடற்படை பயன்படுத்திய சீருடை பாணியை ஒத்திருப்பது போல இருக்கிறது. இந்திய தட்பவெட்ப நிலைக்கு இந்த உடை பொருந்துவதில்லை. எனவே செவிலியர்களின் சீருடையை அவர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப இந்தியமயமாக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய்வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை ... பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap