Advertisement

சிறப்புச்செய்திகள்

திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா | மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர் | வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி | 4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ் | இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் | முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் | ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள் | பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் | காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதிராஜாவும்... இளையராஜாவும்... தமிழ் சினிமா இசையில் செய்த மாயாஜாலம்

10 ஜூன், 2026 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja...-and-Ilayaraja...-the-magic-they-created-in-Tamil-cinema-music
Advertisement

தமிழ் சினிமாவிற்கு 70களின் கடைசி காலக்கட்டத்தில் புதிய புயல் வீசியது என்றே சொல்லலாம். இசையில் ராஜ்ஜியம் செய்த இசையமைப்பாளரும், இயக்கத்தில் ஆளுமை செய்த பாரதிராஜாவும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தான் அறிமுகம் ஆனார்கள். இருவரும் தேனி எனும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.



நட்பு

ஒருமுறை பாரதிராஜா பண்ணைபுரம் சென்ற போது அங்கு இசை வாசிக்கும் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்றவர்கள், பாரதிராஜாவின் நாடகத்திற்கு இசை வாசிக்க மதுரை சென்றார்கள். இவர்களுடன் 'அன்னக்கிளி' செல்வராஜ் நட்பும் இணைந்தது.

1976ல் 'அன்னக்கிளி' படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இளையராஜா புகழ் பெற்றார். உடனே தனது நண்பர் இளையராஜாவை தனது முதல் படமான '16 வயதினிலே' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து 1977ல் தனது திரைப்பயணத்தை துவக்கினார் பாரதிராஜா.



வெற்றிக் கூட்டணி
அதன்பிறகு தனது பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாவையே இசையமைக்க வைத்தார் பாரதிராஜா. “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்”, “நிழல்கள்”, “அலைகள் ஓய்வதில்லை”, “டிக்…டிக்…டிக்…”, “காதல் ஓவியம்”, “மண் வாசனை”, “புதுமைப் பெண்”, “முதல் மரியாதை”, “கடலோரக் கவிதைகள்”, “நாடோடித் தென்றல்” என இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படங்களில் எல்லாம், பாரதிராஜா வசனங்களால் சொல்ல நினைத்த சில இடங்களையும், காட்சிகளால் உணர்த்த நினைத்த சில இடங்களையும் இசையின் மூலம் பேசியும், உணர்த்தியும் இருப்பார் இளையராஜா. அந்த அளவிற்கு பாரதிராஜா, இளையராஜா என்ற அந்த இருபெறும் ஆளுமைகளின் புரிதல்கள் அவர்களது கலைப் படைப்புகளில் வெளிப்பட்டிருப்பதை கடைக்கோடி திரை ரசிகனாலும் காண இயலும்.



என்றும் முதல் மரியாதை
பாரதிராஜாவின் திரைவரிசை என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக மின்னிய ஒரு திரைக்காவியம் தான் “முதல் மரியாதை”. இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, படம் பார்ப்போரின் மனங்களை உருகச் செய்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் இந்தப் படம் பிடிக்காமல் போய், பின் தனக்கிருந்த தயக்கங்களையும் மீறி, ஒரு இசை ராஜாங்கத்தையே அமைத்திருப்பார் இளையராஜா. படத்தின் உயிர் மூச்சே
இளையராஜாவின் பின்னணி இசை என்றால் அது மிகையன்று. பாரதிராஜா, இளையராஜா என்ற இவ்விருவரும் இணைந்து தந்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் திரையுலகின் தனிப்பெரும் திரைக் காவியங்களாகவே பார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.

பாரதிராஜா மற்றும் இளையராஜா என்ற இந்த மாபெரும் கூட்டணியின் இறுதித் திரைப்படமாக 'நாடோடித் தென்றல்” வந்தது. அதன்பின் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இருப்பினும் அவர்கள் தந்த பாடல்கள் காலம் கடந்தும் பேசப்படும்.



பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்கள்...
01. செந்தூரப்பூவே... : 16 வயதினிலே (1977)
02. மாஞ்சோலை கிளிதானோ... : கிழக்கே போகும் ரயில் (1978)
03. நினைவோ ஒரு பறவை... : சிகப்பு ரோஜாக்கள் (1978)
04. தம்தன தம்தன தாளம் வரும்... : புதிய வார்ப்புகள் (1979)
05. ஆயிரம் மலர்களே... : நிறம் மாறாத பூக்கள் (1979)
06. இது ஒரு பொன்மாலை பொழுது... : நிழல்கள் (1980)
07. பூங் கதவே தாழ் திறவாய்... : நிழல்கள் (1980)
08. கொத்தமல்லி பூவே... : கல்லுக்குள் ஈரம் (1980)
09. சிறு பொன்மணி... : கல்லுக்குள் ஈரம் (1980)
10. காதல் ஓவியம்... : அலைகள் ஓய்வதில்லை (1981)
11. ஆயிரம் தாமரை... : அலைகள் ஓய்வதில்லை (1981)
12. சங்கீத ஜாதிமுல்லை... : காதல் ஓவியம் (1982)
13. நாதம் என் ஜீவனே... : காதல் ஓவியம் (1982)
14. பொத்தி வச்ச மல்லிக மொட்டு... : மண்வாசனை (1983)
15. ஆனந்த தேன் சிந்தும்... : மண்வாசனை (1983)
16. கஸ்தூரி மானே கல்யாண தேனே... : புதுமைப்பெண் (1984)
17. பொன் மானே கோபம் ஏனோ... : ஒரு கைதியின் டைரி
18. பூங்காற்று திரும்புமா... : முதல் மரியாதை (1985)
19. ராசவே உன்ன நம்பி... : முதல் மரியாதை (1985)
20. கொடியிலே மல்லிகப்பூ... : கடலோரக் கவிதைகள் (1986)
21. போகுதே போகுதே என் பைங்கிளி... : கடலோரக் கவிதைகள் (1986)
22. பரணி பரணி... : புது நெல்லு புது நாத்து (1991)
23. கருத்த மச்சான்... : புது நெல்லு புது நாத்து (1991)
24. மணியே மணிக்குயிலே... : நாடோடித் தென்றல் (1992)
25. சந்தன மார்பிலே... : நாடோடித் தென்றல் (1992)

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல்பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் ... ''பாரதிராஜா குழந்தை மாதிரி'' - ரஜினி; நடிகர் கமலும் நேரில் அஞ்சலி ''பாரதிராஜா குழந்தை மாதிரி'' - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap