தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகள் : குஷ்பு நெகிழ்ச்சி பதிவு | 12 ஆண்டுகளுக்கு முன்பே இதை நிவின்பாலி சொன்னார் : அனுபமா பரமேஸ்வரன் | பிரித்விராஜ், நிவின்பாலி 4வது நேரடி மோதல் : இம்முறையாவது பிரித்விராஜ் வெல்வாரா? | ஹீரோ சைப் அலிகான், வில்லன் அக் ஷய் : ரகசியம் உடைத்த ஹைவான் டிரைலர் | திரிஷ்யம் நடிகையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | கலை நிகழ்ச்சிக்காக காமெடி நடிகருக்கு மேக்கப் போட்டுவிட்ட மோகன்லால் | வாரணாசி : சர்வதேச சந்தைகளை குறி வைக்கும் ராஜமவுலி! | 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ் | சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா | ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியீடு |

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படமாக 'மகுடம்' உருவாகிறது. இதை நடிகர் விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
சமீபத்தில் மகுடம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் மகுடம் படத்தை அடுத்த மாதம் ஜூலை மூன்றாம் வாரத்தில் திரைக்கு கொண்டு வர வேண்டிய திட்டத்தில் விரைவாக பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதாக இந்த படத்தை ஈட்டி பட புகழ் ரவி அரசு இயக்கினார். இவருக்கும், விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ரவி அரசு விலகி கொள்ள விஷால் இயக்கம் பொறுப்பை ஏற்றார்.




