பிரித்விராஜ், நிவின்பாலி 4வது நேரடி மோதல் : இம்முறையாவது பிரித்விராஜ் வெல்வாரா? | ஹீரோ சைப் அலிகான், வில்லன் அக் ஷய் : ரகசியம் உடைத்த ஹைவான் டிரைலர் | திரிஷ்யம் நடிகையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | கலை நிகழ்ச்சிக்காக காமெடி நடிகருக்கு மேக்கப் போட்டுவிட்ட மோகன்லால் | வாரணாசி : சர்வதேச சந்தைகளை குறி வைக்கும் ராஜமவுலி! | 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ் | சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா | ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியீடு | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் : கார்த்தி | 35 வருட கனவு... ‛மகுடம்' ரிலீஸ் குறித்து விஷால் உருக்கம் |

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வருகிறார். அவருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் யாத்ரா கடந்த சில வருடங்களாக நடிப்பு மற்றும் நடன பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் யாத்ராவை வைத்து தனுஷ் ஒரு டெஸ்ட் ஷூட் நடத்தவுள்ளார். யாத்ராவை அறிமுகமாகும் படத்தை தனுஷ் இயக்கவுள்ளாராம். இது பழைய ரஜினி பட பாணியில் மாஸ், எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகும் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பை இவ்வருட இறுதி அல்லது 2027ம் ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.
தனுஷின் 55வது படத்தை தயாரித்து வரும் ஆர்.டேக் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் மற்றும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.




