சாலமன் பாப்பையா காலமானார் | மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சி... : குஷ்புவின் டிசைனர் யார் தெரியுமா? | நிஜ களரி வீராங்கணையாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் சின்னத்திரை நடிகர் | பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது | என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கர் விருது தரலாம் : ரவி மோகனை சீண்டிய ஆர்த்தி | பிளாஷ்பேக் : சிவாஜியை காப்பி அடித்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே அதிரடி காட்டிய ஏ.பி.நாகராஜன் | லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய் | டொரோன்டோ விழாவுக்குச் சென்ற 'டோரதி' குழு |

ஹிந்தியில் சஞ்சய் தத் நடிப்பில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். மற்றும் அதன் இரண்டாம் பாகமான லகே ரஹோ முன்னாபாய் ஆகிய இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தமிழில் முதல் பாகமும் தெலுங்கில் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியைப் பெற்றன. இரண்டாம் பாகம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன. மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் இப்போதும் குறையாத ஆர்வம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி, இந்த மூன்றாம் பாகம் குறித்து கூறும்போது, "மூன்றாம் பாகத்துக்கான பணிகள் கைவிடப்படவில்லை. அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மூன்று கதைகள் எழுதப்பட்டு இதுவரை முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கின்றன. இரண்டு பாகங்களும் வெளியாகி குறிப்பிட்ட தரத்தை நிர்ணயித்துள்ளன. அதைவிட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ மூன்றாம் பாகத்தை உருவாக்குவதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.