சாலமன் பாப்பையா காலமானார் | மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சி... : குஷ்புவின் டிசைனர் யார் தெரியுமா? | நிஜ களரி வீராங்கணையாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் சின்னத்திரை நடிகர் | பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது | என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கர் விருது தரலாம் : ரவி மோகனை சீண்டிய ஆர்த்தி | பிளாஷ்பேக் : சிவாஜியை காப்பி அடித்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே அதிரடி காட்டிய ஏ.பி.நாகராஜன் | லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய் | டொரோன்டோ விழாவுக்குச் சென்ற 'டோரதி' குழு |

ஆந்திராவை சேர்ந்த ஸ்ரேயா ரெட்டி தமிழில் திமிரு, வெயில், தோரணை, வெடி, அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 'சுழல்' உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்தார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர் 'மாகாளி' படத்தில் நடித்து வருகிறார். பூஜா கொல்லூரு இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக களரிப் பயிற்சியைக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரேயா ரெட்டி மேற்கொண்டு வந்தார்.
கடந்த 2024ம் ஆண்டு பயிற்சியைத் தொடங்கிய அவர், வாரத்துக்கு சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சினிமாவிற்காக களரி பயிற்சி எடுத்த அவர் அதில் அதிக ஆர்வம் கொண்டு உண்மையான பயிற்சி எடுத்து தற்போது களரி வீராங்கணையாக மாறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ஒருகாலத்தில் எனது உடலுடனும் மனதுடனும் நடந்த போராட்டமாகக் களரி தோன்றியது. படிப்படியாக மிகப்பெரிய பலமாக மாறி விட்டது. ஒவ்வொரு வீழ்ச்சியிலும், ஒவ்வொரு சவாலிலும் ஒவ்வொரு பாடத்திலும் களரி என்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கற்றுக் கொடுத்தது. என் மனமும் உடலும் வலிமையாகி இருக்கிறது.
களரி எனக்கு வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; அது என் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. இந்த தற்காப்பு கலையைக் கற்றுக்கொண்டது என் வாழ்க்கையின் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. நான் எடுத்த மிகச் சிறந்த முடிவும் இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.




