நாகார்ஜுனாவின் 100வது படத்தில் தபுவின் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியானது! | 'கட்டா குஸ்தி 2' : 3 நாள் வசூல் என்ன தெரியுமா? | அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி! சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் காணொளி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி! | 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி, இந்த வாரம் தெரிந்துவிடும்… | வெளியான 2 நாளில் இந்தியாவில் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட 'சட்லஜ்' திரைப்படம் | 'டிரைவிங் லைசன்ஸ்' படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது ஏன் ? ; 7 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் விளக்கம் | ‛பாஸ் ஸ்கேம்' மூலம் ரூ.38.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி : கமல் நிறுவனம் புகார் | மாற்றம் வந்தது அக்கறையால் அல்ல, பயத்தால் ! பார்வதி ஓப்பன் டாக் | இறுதி ஊர்வலத்திற்கான பாடல்; இப்போதே ரெடி செய்த ஜாக்கிசான் | தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன் |

இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் ‛டெலிகிராம்' முக்கியமானது. கோடிக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்துகின்றனர். இதில் நிறைய சர்ச்சைகளும் அவ்வப்போது நடக்கிறது. ஏற்கனவே இந்த செயலியில் திரைப் படங்களை சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்வது தொடர்பான பிரச்னை உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் லீக் தொடர்பான பிரச்னையிலும் டெலிகிராம் செயலி சிக்கியது. இதனால் டெலிகிராம் சில நாட்கள் இந்தியாவில் முடக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு அடுத்த செக்கை டெலிகிராமிற்கு வைத்துள்ளது. சினிமா மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யும் டெலிகிராம் சேனல்களை முடக்க வேண்டும் என டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி 15 நாட்களுக்குள் எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை சமர்பிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் உரிமையாளர்கள் தங்களின் படைப்புகள் டெலிகிராம் தளத்தில் திருட்டுத்தனமாக பகிரப்படுவதாக அளித்த தொடர் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.