நாகார்ஜுனாவின் 100வது படத்தில் தபுவின் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியானது! | 'கட்டா குஸ்தி 2' : 3 நாள் வசூல் என்ன தெரியுமா? | அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி! சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் காணொளி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி! | 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி, இந்த வாரம் தெரிந்துவிடும்… | வெளியான 2 நாளில் இந்தியாவில் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட 'சட்லஜ்' திரைப்படம் | 'டிரைவிங் லைசன்ஸ்' படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது ஏன் ? ; 7 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் விளக்கம் | ‛பாஸ் ஸ்கேம்' மூலம் ரூ.38.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி : கமல் நிறுவனம் புகார் | மாற்றம் வந்தது அக்கறையால் அல்ல, பயத்தால் ! பார்வதி ஓப்பன் டாக் | இறுதி ஊர்வலத்திற்கான பாடல்; இப்போதே ரெடி செய்த ஜாக்கிசான் | தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன் |

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றார். கடைசியாக எல்ஐகே படத்தில் நடித்தார். இந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அடுத்தபடியாக தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார்.
பிஆர் ஷோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார். முதல் படத்தை இவரிடம் உதவியாளராக இருந்த 6 பேர் குழுவாக இணைந்து ‛தி ஆல்பா யூனிட்' என்ற பெயரில் இயக்குகின்றனர். இந்த படத்தின் கதையை பிரதீப்பே எழுதி உள்ளார். இது நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படம் என கூறப்படுகிறது. நாயகிகளாக மமிதா பைஜூ, ஸ்வாசிகா மற்றும் புதுமுகம் அனாமிகா மஹி ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த கூட்டணியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் உள்ளார். அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
விரைவில் இந்த படம் துவங்க உள்ளது.