Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்

09 ஜூலை, 2026 - 06:09 IST
எழுத்தின் அளவு:
The-Censor-Board-has-given-an-A-certificate-to-the-film-Janyayan.
Advertisement


எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் தாமதம் ஆனதால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் மேலும் தாமதமானது.

நடிகர் விஜயின் கடைசி படம் என அறிவித்த இப்படம், தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை. தேர்தல் முடிந்து, வெற்றிப்பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்றார். அதன்பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வந்த நிலையில், இன்று (ஜூலை 9) சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதில், ஜனநாயகன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் என குறிப்பிட்டுள்ளனர். படத்தின் நீளம், 183 நிமிடங்கள் (3 மணிநேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவித்துள்ளனர். படத்தில் ஆட்சேபனையான காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், எந்தெந்த காட்சிகளை நீக்கியது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது சென்சார் கிடைத்ததை அடுத்து, ஜூலை 24ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சகோதரியின் திருமணத்தில் காதலர் பெயரை சூசகமாக வெளிப்படுத்திய ஜான்வி கபூர்சகோதரியின் திருமணத்தில் காதலர் ... 12 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் சுகன்யா ரீ-என்ட்ரி 12 வருடங்களுக்குப் பிறகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap