Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''பிரபாஸ் சோம்பேறி அல்ல.. தொலைநோக்கு பார்வை கொண்டவர்'': காஜல் அகர்வால்

19 ஜூலை, 2026 - 05:12 IST
எழுத்தின் அளவு:
Prabhas-is-not-lazy..-he-is-a-visionary-Kajal-Aggarwal
Advertisement


எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலிக்குப் பிறகு, இந்திய அளவில் மிகப்பெரிய பான்-இந்தியா மார்க்கெட்டை உருவாக்கிய முதல் தென்னிந்திய நடிகர் பிரபாஸ் ஆவார். இவருடைய படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய வசூலை குவித்து வருகின்றன. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான, 'சாஹோ, ராதே ஷியாம், சலார்' மற்றும் அமிதாப் பச்சன், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சைன்ஸ்-பிக்சன் படமான 'கல்கி 2898 ஏடி' போன்ற மெகா பட்ஜெட் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் பிரபாஸுடன் 'டார்லிங், மிஸ்டர் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தவரான காஜல் அகர்வால், பிரபாஸின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை பாராட்டி, ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 'பிரபாஸை சினிமாவில் மகத்தான சாதனைகளை படைப்பதற்காகவே பிறந்த ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார்' என்று விவரித்துள்ள காஜல், பிரபாஸ் ஒரு சோம்பேறி என்று மற்றவர்கள் கூறும் பொதுவான கருத்தை மறுத்துள்ளார்.

''இந்திய சினிமாவில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் பிரபாஸூம் ஒருவர். அவர் எப்போதும் தனது இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பிரபாஸ் தனது திரைப்பயணம் குறித்து மிகவும் தெளிவான தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளார். தான் எதை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம் என்பதை அவர் துல்லியமாக அறிந்து வைத்துள்ளார்'' என்றும் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சீதா தேவி' போன்ற தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது அத்தனை எளிதல்ல! - சாய் பல்லவி'சீதா தேவி' போன்ற தெய்வீகக் ... பிளாஷ்பேக்: 60 ஆண்டுகளுக்கு முன்பே முகமாற்று அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்திய “ஆசைமுகம்” பிளாஷ்பேக்: 60 ஆண்டுகளுக்கு முன்பே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap