சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வரவிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான ஐ ஆம் கேம் படம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது செப்டம்பர் 3ம் தேதி அன்று உலகம் முழுவதும் ஐ ஆம் கேம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதோடு இப்படத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் மிக பிரம்மாண்டமாக வெளியிடவும் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளனர். ஐ ஆம் கேம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன், கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.




