பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் | குழந்தை தான் முக்கியம், பிக்பாஸ் முக்கியமல்ல : ஆடை வடிமைப்பாளர் ஜாய் கிரிசில்டா | ரஜினியின் ஜெயிலர் 2 வில் திருத்தமா? | மோகன்லாலின் ‛ஆபரேஷன் கங்கா' | இம்மார்ட்டல் படத்தின் புரொமோஷனில் பங்கேற்காதது ஏன்? - கயாடு லோகர் கொடுத்த விளக்கம் | கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம்: வெப் தொடராக வெளியாகிறது | பிளாஷ்பேக்: வில்லங்க கதையும், வெட்டிச் சாய்த்த தணிக்கையும் | பிளாஷ்பேக் : 3 முறை சினிமாவான 'பட்டினத்தார்' வாழ்க்கை | மனைவியை விவாகரத்து செய்தார் கன்னட நடிகர் துனியா விஜய் | லதா ராவ் தவிப்பு : விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் |

கோபிசந்த் மாலினேனி இயக்கும் தனது 111வது படத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இதை முடித்ததும் கொரட்டலா சிவாவுடன் இணைந்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தயாரிப்பாளர்கள் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் ஒரு அதிரடியான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்காக ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஏற்கனவே 2024ல் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்து வெளியான சைந்தவ் என்ற படத்தில் இதுபோன்று ஒரு சிறப்பு கேரக்டரில் ஆர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கொரட்டலா சிவா.