Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம்

08 செப், 2026 - 04:36 IST
எழுத்தின் அளவு:
How-did-you-become-a-composer-Keneeshaa-explains
Advertisement


நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அவரின் தோழி மற்றும் இந்த படத்தை ரவியுடன் இணைந்து தயாரிக்கும் கெனிஷா.

இசையமைப்பாளர் ஆனது குறித்து கெனிஷா கூறுகையில், ''என் திறமையின் மூலமே வாய்ப்பை பெற விரும்பினேன். தொடக்கத்தில் எனக்கு இதில் இணையும் எண்ணம் இல்லை. இந்தத் திரைக்கதை அத்தனை அற்புதமாக இருந்ததால், அவருக்கு மிகச் சிறந்த இசையமைப்பாளர் அமைய வேண்டும் என்பது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதில் சமரசம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால், நாம் தயாராக இருப்பதை விடவும் நேரம் நமக்காகக் கனிந்து வரும்போது வாய்ப்புகள் உருவாகும் என நினைக்கிறேன்; அதுதான் நடந்தது. நான் படத்திற்குள் வந்தேன்.

முதலில் மூன்று சாம்பிள் பாடல்களை உருவாக்கினேன். அந்த பாடல்களைக் கொடுத்ததும், அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ரவி மோகன் இயக்கும் படத்தில் பணியாற்றுவது மிகப்பெரிய பொறுப்பு, முற்றிலும் வித்தியாசமான இசை ஒன்றை விரும்பினார். தலைப்பு மட்டுமே 'ஆன் ஆர்டினரி மேன்' என்று இருக்கும், மற்றபடி எல்லாமே அசாதாரணமானது. எது நன்மை பயக்கும் என்பதைப் பார்க்க நான் பல புதிய வகைகளை ஆராய வேண்டியிருந்தது. இசை ஒருபோதும் திரைப்படத்தை மிஞ்சவோ அல்லது அதன் தரத்தைக் குறைக்கவோ கூடாது என்று நான் நம்புகிறேன்.

கெனிஷா என்றால் தெளிவான நீர் என்று பொருள். கெனிஷாவைப் பிரதிபலிக்கும் ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. அத்துடன் ஓர் சுயாதீனக் கலைஞர் (indie artist) மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் என்ற நிலைகளுக்கு இடையே வேறுபாட்டைக் காட்ட ஒரு ஆடம்பரமான மேடைப் பெயரையும் விரும்பினேன். அதனால்தான் முதலில் படத்தின் இசையமைபாளர் என்ற பெயரில் 'ஹைட்ரோ' என்பதைத் தேர்ந்தெடுத்தேன்.

​அந்தக் காலகட்டத்தில் எனது பெயரைச் சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் இருந்தன. ஆனால் இப்போது, நாம் உழைக்கும்போது அந்தப் படைப்பில் நமது சொந்தப் பெயர் இருப்பதே மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். நல்லதோ கெட்டதோ, உங்கள் பெயரே அதை எதிர்கொள்ளட்டும். அதனால், இறுதியாக எனது சொந்தப் பெயரிலேயே செல்வது என்று முடிவு செய்தோம், இப்போது பட இசையமைப்பாளர் கெனிஷா என பெயர் வருகிறது'' எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே….தேசிய திரைப்பட விருதுகள், ... அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap