பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம் | எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி | மாளவிகா மோகனனுக்கு பதில் வாமிகா கவி | 46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி | புஷ்பா இயக்குனர் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் ராம் சரண் | ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி? | 20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்! | அரசன், மஞ்சணத்தியை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியங்கா மோகன் | இசையமைப்பாளர் ஆனது எப்படி? பாடகி கெனிஷா கொடுத்த விளக்கம் | தேசிய திரைப்பட விருதுகள், டில்லிக்கு வெளியே…. |

தமிழில் 2021ல் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அதன்பிறகு எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றாலும் அவருக்கு எதிர்பார்த்தபடி கோலிவுட்டில் ஒரு வலுவான இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கி வரும் மஞ்சணத்தி படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் பிரியங்கா மோகன்.
அதனால் தமிழில் இந்த இரு படங்கள் தனக்கு மைல்கல் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். இதையடுத்து சிவராஜ் குமார் நடிக்கும் படம் மட்டுமின்றி கவின், ஜெய் ஆகியோரின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதனால் இப்போது அவர் நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் தனக்கு நல்லதொரு இடம் கிடைக்கும் என நம்புகிறார் பிரியங்கா.




