மீண்டும் மீண்டும் வாய்ப்பு... : டைரக்டர், ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஹிஸ்டரி! | ஓடிடி டிரெண்டிங்கில் சூரியின் 'மண்டாடி' | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்படுகிறதா 'ராமாயணா'? | விஜய் சந்திப்பை தவிர்த்தாரா பவன் கல்யாண்? | நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா திரிஷா? | ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் சாய் பல்லவி! | 'ரணபாலி' எனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என்கிறார் விஜய் தேவரகொண்டா! | ஜெயிலர் 2 : 1.1 மில்லியன் கடந்த அமெரிக்க பிரிமியர் முன்பதிவு | ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ஒரு தலைவர் : அனிருத் பதிவு | ஜெயிலர் 2 ரிலீஸ் : சென்னையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் படக்குழு |

சகோதரி நடிகைகளையாக 80களில் புகழின் உச்சியில் இருந்தவர்கள் அம்பிகாவும், ராதாவும். ராதா திருவனந்தபுரத்தில் நட்சத்திர ஓட்டல் நடத்துகிறார். அம்பிகா எஸ்டேட் நடத்துகிறார். சென்னையில் இருவருக்கும் பல அசையா சொத்துகள் உள்ளன.
சென்னை, வளசரவாக்கத்தில் இருவருக்கும் சொந்தமான ஏ.ஆர்.எஸ் கார்டன் என்ற சினிமா படப்பிடிப்பு தளம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ராதா, தனது சகோதரியும், நடிகையுமான அம்பிகா தனது கையெழுத்திட்ட காசோலைகளை திருடி 46 கோடியளவில் பணமோசடி செய்ய முயன்றதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராதாவை விசாரணைக்காக நேரில் அழைத்திருந்தனர். இதனால் ராதா நேற்று மாலை 3 மணிக்கு குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து அம்பிகாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுர்னா குஞ்சன் நாயர் ஆகியோரை நேரில் அழைத்துத் விசாரணைநடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இருவருக்கும் இதற்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.