Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காந்தாரா : வெளிச்சத்துக்கு வந்த தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி மோதல்

02 அக், 2026 - 05:45 IST
எழுத்தின் அளவு:
Kantara--The-Conflict-Between-Producer-and-Rishab-Shetty
Advertisement


கன்னடத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இதர மொழிகளிலும் ரசித்துப் பார்க்கப்பட்ட படங்கள் 'காந்தாரா' மற்றும் 'காந்தாரா சாப்டர் 1'. ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில், ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் அவை.

காந்தாரா சாப்டர் 1, படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து தயாரிப்பு நிறுவனம் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி புகைப்படம் எதையும் பகிராமல் ஒரு புலியின் படத்துடன் மட்டும் ஒரு வருட போஸ்டரை வெளியிட்டது. அதில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மட்டுமே இருந்தது. படத்தின் இயக்குனர் பெயர் இடம் பெறவில்லை.

அதற்கடுத்து, படத்தின் இயக்குனரும், நாயகனனுமான, ரிஷப் ஷெட்டி, ஒரு நீண்ட பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்தை அவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, அவர்களது எக்ஸ் தள ஐ.டி.,யையும் 'டேக்'செய்யவில்லை. அவர் பகிர்ந்த வீடியோ மற்றும் போஸ்டரிலும் தயாரிப்பு நிறுவனம் பெயர் இடம் பெறவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பே ரிஷப் ஷெட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பின்தொடர்வதை 'அன்பாலோ' செய்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. அவரது சொந்த நிறுவனம், மனைவி ஆகியோர் மட்டுமே அவரது பாலோயர் லிஸ்ட்டில் உள்ளார்கள்.

ரிஷப் ஷெட்டி, ஹொம்பாலே பிலிம்ஸ் ஆகியோரது இன்றைய பதிவு, அவர்களுக்கு இடையிலான மோதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது கன்னட சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து திரைக்கு வரும்  கீர்த்தி சுரேஷ் படங்கள்!அடுத்தடுத்து திரைக்கு வரும் ... இயக்கமா... நடிப்பா...? இயக்குனர் ஜேசன் சஞ்சய் பதில்! இயக்கமா... நடிப்பா...? இயக்குனர் ஜேசன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap