முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி | கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் பல்லவி? | வைலரான நடனம் : லிங்குசாமி விளக்கம் | சிவகார்த்திகேயன் 27 படத்திற்கு சாய் அபயங்கர் இசை | பி.எஸ்.மித்ரனுடன் இணையும் யஷ் | சுகுமார், ராம்சரண் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் | நடிகையாக அறிமுகமாகும் சிவரஞ்சனி மகள் | ஹீரோக்களுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டி மிரட்டிய நடிகைகள் | ‛சினேகா 45' : புன்னகை மாறாத அரசியின் டாப் 10 படங்கள் | ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை: 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர்' படக்குழு முயற்சி |

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
நடிகை பரியா அப்துல்லா கூறுகையில், "ரசிகர்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
இயக்குனர் சஞ்சய் கூறுகையில், ''கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் ரிலீஸூக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்'' என்றார்.