நான் அம்மா செல்லம், அப்பா உடன் இணைந்து நடிக்க ரெடி : துல்கர் சல்மான் | இந்தியா சார்பாக ஆஸ்கர் அடிக்குமா 'கோந்தல்'? : படத்தில் அப்படி என்ன ஸ்பெஷ்! | கதை தேர்வில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஸ்ரீலீலா | சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட் படங்கள் | சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்! | மைசா படத்தின் விளம்பரப் பணிகளில் இறங்கப்போகும் ராஷ்மிகா | சீன் ரூ.260 கோடி வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூலை முறியடித்தது | பிளாஷ்பேக்: கதையின் நாயகனாகவும் கதாசிரியராகவும் எம் ஜி ஆர் பணியாற்றிய ஒரே திரைப்படம் | 957 மில்லியன் பார்வைகள் : புட்ட பொம்மா சாதனையை முறியடித்த சுயாதீன தெலுங்குப் பாடல் | சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென் |

'காதலிக்க நேரமில்லை' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதர் இயக்கிய படம் 'கலைக்கோவில்'. இதில், எஸ்.வி.சுப்பையா, ஆர்.முத்துராமன், நாகேஷ், சந்திரகாந்தா, ராஜஸ்ரீ, ஜெயந்தி, வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன் உட்பட பலர் நடித்தனர். இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தனது பாக்கியலட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்தார்.
இதில் எஸ்.வி.சுப்பையா கதாபாத்திரத்துக்கு முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தவர், ரங்காராவ். அவர் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற புகார்கள் அப்போது இருந்தன. அதையும் மீறி, அவரை நேராக அழைத்துப் பேசி, ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர். ஒப்பந்தப்படி ரங்காராவ் சரியான நேரத்திற்கு நடிக்க வராததால் எஸ் வி சுப்பையாவை நடிக்க வைத்தார்.
ஒரு வீணை வித்வான் ஒரு நடனக்காரியின் மீது மோகம் கொண்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்பு அதிலிருந்து மீண்டு வருவது தான் படத்தின் கதை. சிறப்பான இயக்கம், காட்சி அமைப்புகள் பிரமாதமான பாடல்கள் இருந்தும் இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இதனால் படத்தை வாங்கி நஷ்டம் அடைந்தவர்களுக்கு ஸ்ரீதர் நஷ்ட ஈட்டுத்தொகை கொடுத்தார்.

இதே கதையைத்தான் கே. பாலச்சந்தர் 'சிந்து பைரவி' என்ற படமாக இயக்கினார். வீணை இசைக்கலைஞர் என்பதை கர்நாடக சங்கீத பாடகராக மாற்றி, நாயகி நடனக் கலைஞர் என்பதை மாற்றி சமூக சேவகி கேரக்டரை உருவாக்கினார். படம் பெரிய வெற்றி பெற்றது.
பாலமுரளி கிருஷ்ணா, பி.சுசீலா குரலில் 'தங்கரதம் வந்தது வீதியிலே', என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே பாணியில்தான் 'சிந்து பைரவி' பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே' என்ற பாடல் இடம் பெற்றது.




