சூர்யாவிடமிருந்து 'வாட்ச்' பரிசு பெற்ற 'சீன்' பட வில்லன் நஸ்லென் | 'தனுஷ், 3, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' பெயர்களை மறந்த அனிருத் !! | 'சத்தியவான் சாவித்திரி'க்கு என்னாச்சு? புரமோஷன் இல்லாமல் 'சைலண்ட்' | இப்போதெல்லாம் விழாக்களுக்கு அழைப்பு இல்லை: ஆர்.வி.உதயகுமார் வேதனை | ஹனுமன் பட ஹீரோ தேஜா சஜ்ஜாவிற்கு டும் டும் | பிளாஷ்பேக் : ஒரே ஒரு படம் இயக்கிய இரட்டையர்கள் | பிளாஷ்பேக் : யானைக்கும் அடிசறுக்கும் | விஜய் ஆண்டனி ஏன் செருப்பு போடுவதில்லை? அந்த எளிய வாட்ச் கட்டுவது ஏன்? | துல்கர் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்க ஐடி வேலையை உதறிவிட்டு வந்த சாத்விகா வீரவல்லி | "தனித்தனியாக வசிப்பதால் தான் எங்கள் திருமணம் இன்னும் நீடிக்கிறது" ; ரம்யா கிருஷ்ணன் |

தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு பிடித்த இயக்குநனர் மகேந்திரன் என்று குறிப்பிட்டார். இத்தனைக்கும் மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, ஜானி என 3 படங்களில் தான் ரஜினி நடித்தார்.
அவர் இயக்கிய அழகிய கண்ணே, மெட்டி, படங்கள் சுமாரன வரவேற்பை பெற்றவை. ஆனால் மகேந்திரன் படங்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் 'ஊர் பஞ்சாயத்து'. பாண்டியராஜன், மகாலட்சுமி, ஸ்ரீகாந்த், வி.கே.ராமராமி, எஸ்.என்.பார்வதி, சுலக்ஷனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை அமைத்திருந்தார்.
ஒரு கிராமத்து பெரியவரின் வளர்ப்பு மகனுக்கும், அவரது குடும்பத்திற்குமான மோதல்தான் கதை. சாதாரணமான இந்த கதையை மகேந்திரன் தன் பாணியில் சிறப்பான திரைக்கதையில் வெளிப்படுத்த முயற்சித்து அதில் தோல்வி கண்டதால் படம் வரவேற்பை பெறவில்லை. 'யானைக்கும் அடிசறுக்கும்' என்றே அன்று படத்தை பலர் விமர்சித்தனர்.