Advertisement

சிறப்புச்செய்திகள்

பீட்சா பாய்ஸ் கதை என்ன? : புனேவை சேர்ந்த இயக்குனர் விளக்கம் | தமிழில் ஏன் தலைப்பு இல்லை : தங்கர்பச்சான் ஆதங்கம் | 20 ஆண்டுகள் 124 படங்கள் : ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி | இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மம்முட்டி படங்கள் | இரண்டே மாதத்தில் பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு நிறைவு | 'மாத்ருபூமி' படக்குழுவிற்கு சுவிஸ் கடிகாரங்களைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சல்மான் கான் | சாத்விகா வீரவல்லி : முதல் படம் வருவதற்கு முன்பே 4 படங்களில் ஒப்பந்தம் | ரோஜாவின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் | பிளாஷ்பேக் : எஸ்.வி.சுப்பையாவின் வித்தியாசமான பாலிசி | பிளாஷ்பேக் : குறுகிய காலத்தில் காணாமல் போன 'ஆவாரம்பூ' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : எஸ்.வி.சுப்பையாவின் வித்தியாசமான பாலிசி

18 நவ, 2026 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Flashback-SV-Subbaiah-Different-Policy
Advertisement

நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர்கள் மிகை நடிப்பையே தந்தார்கள். காரணம் நாடகத்தில் ஒலி பெருக்கி இல்லாததால் அவர்கள் வசனத்தை சத்தமாக பேசியே நடிக்க வேண்டும். அதுவே அவர்களுக்குள் மிகை நடிப்பை கொண்டு வந்தது. அதனால் சிவாஜியிடம் கூட சில காலம் வரை மிகை நடிப்பு வெளிப்பட்டது. ஆனால் நாடகத்தில் இருந்து வந்தாலும் கடைசி வரை இயல்பான நடிப்பை கொடுத்தவர் எஸ்.வி.சுப்பையா.

சித்தூர் வி.நாகையா, எஸ்.வி.ரங்கா ராவ் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டவர். அதேநேரத்தில் தனக்கென சில பாலிசிகளையும் வைத்திருந்தார். ஒட்டு மீசை, தாடி வைத்து நடிப்பதில்லை என்பது அதில் ஒன்று. இதனால் பல பட வாய்ப்புகளை தவிர்த்தார். ஒட்டு மீசை, தாடி, தலைமுடி வைத்தால் தன்னால் இயல்பாக நடிக்க முடியாது என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.

என்றாலும் ஸ்ரீதருக்காக ஒரே ஒரு படத்தில் தன்னை மாற்றிக் கொண்டார். ஸ்ரீதர் இயக்கிய 'கலைக்கோவில்' படத்தில் வரும் முக்கியமான வீணை வித்வான் கேரக்டரில் நடிக்க எஸ்.வி.ரங்காராவை ஒப்பந்தம் செய்திருந்தார் ஸ்ரீதர். அவர் தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வரவே அவரை நீக்கி விட்டு அவருக்கு பதிலான எஸ்.வி.சுப்பையாவை நடிக்க வைத்தார். ஆனால் வீணை வித்வான் கேரக்டருக்கு ஒட்டுத்தாடி, மீசை வைக்க வேண்டும் என்று ஸ்ரீதர் சொல்ல அதை மறுத்த சுப்பையா பின்னர் கேரக்டரின் தன்மை அறிந்து ஸ்ரீதருக்காக நடித்து கொடுத்தார். எஸ்.வி.சுப்பையா பாரதியார் வேடத்தில் நடித்தபோது ஒட்டு மீசை வைக்காமல் தானே மீசை வளர்த்து நடித்தார்.

பின்னால் காலப்போக்கில் நவீன மாற்றங்களை ஏற்றுக் கொண்டு கடைசியாக சில படங்களில் தனது பாலிசியை விட்டுக் கொடுத்து நடித்தார். அவர் அளவிற்கு பாரதியார் வேடம் இன்று வரை யாருக்கும் பொருத்தமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : குறுகிய காலத்தில் காணாமல் போன 'ஆவாரம்பூ'பிளாஷ்பேக் : குறுகிய காலத்தில் ... ரோஜாவின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் ரோஜாவின் 54வது பிறந்தநாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap